உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் 16

இவர் உண்மையாகவே கடவுளிடத்து அன்புடையவராயிருத்தல் கூடுமோ? தாம் அவர்களோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாதொழியினும், அவர்களைக் கோயில்களினுள்ளே வணங்கவும் விடாமை எத்துணைப் பெரிய வன்கண்மை! இத்தகைய வன்கண்ணர் ருக்கும் வரையில் மக்களுள் ஒற்றுமையும் அன்பும் உண்டாகா; இத்தமிழ் நாடு, ஒன்றோ டொன்று பகைத்துப் போரிட்டு மாயும் மற விலங்குகள் உள்ள காடாகவே சீரழியும்!

இத்தகைய கொடியரால் மக்கள் ஒற்றுமையின்றிப் பல வேறுவேறு சிறுசிறு வகுப்பினராய்ச் சிதர்ந்தமையா லன்றோ, இந் நாட்டவர் வலிவிழந்து, துருக்கர் முதலான அயல்நாட்டு மக்களின் படையெடுப்பின் கீழ் அகப்பட்டு நசுங்கிக் கணக்கின்றி மாய்ந்தனர்! இந் நாட்டவர் ஒற்றுமையும் வலியும் உடைய ராயிருந்தால், அவ்வயல் நாட்டவர் இங்கே கலைக்காட்டலுங் கூடுமோ! இறைவனருளால் ஆங்கில அரசு இந் நாட்டின்கண் நிலைப்பட்டகாலந் தொட்டன்றோ, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட வகுப்பினர் சிறிது சிறிதாக ஏனையோர்க்குள்ள உரிமை களைப் போல்வன தாமும் பெற்று மேலேறி வருகின்றனர். இம் முறையரசு மட்டும் இந் நாட்டில் இதுகாறும் நிலைபெரு திருந்தால், மறுப்புரைகாரரை யொத்த வன் கண்ணரால் இந் நாட்டவர் இன்னுஞ் சீர்குலைந்து, இந்நாடு முற்றுமே பாழடைந்து போயிருக்கும். முன்னே வந்த துருக்க அரசரால் இந் நாட்டவரடைந்த துன்ப வரலாறுகளை நன்கறிந்தவர்க்கே யாம்கூறும் இவ்வுண்மை புலப்படும். இந்நாட்டவரிற் சாதிவெறி பிடித்த வகுப்பார் சிலர் நடுவுநிலை சிறிதுமின்றித், தம்மிற் றாழ்ந்தவராகத் தம்மாற் கருதப்பட்ட ஏழையெளிய மக்கட்குச் செய்த தீமைகட்கு ஓர்அளவே யில்லை.

அவ்வெளிய மக்கள் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையு மின்றி, அதனால் உடல் வலிவிழந்து, கல்வியுணர்ச்சி யில்லா மையால் அறிவுவலிவு மிழந்து நிலை கலங்கி நின்றமையா லன்றோ; அவர்கள் இந் நாட்டின்மேற் படையெடுத்து வந்த துருக்கர் மதத்தை நூறாயிரக்கணக்காய்த் தழுவித் தாமுந் துருக்கராயினர். துருக்கர்க்குப் பின்வந்த போர்த்துக்கேசியர், உலாந்தாக்காரர் இந் நாட்டின்கட் பரவச் செய்த கத்தோலிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/209&oldid=1583950" இலிருந்து மீள்விக்கப்பட்டது