உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

❖ LDMMLDMOшLD -16 →

களைக் குழையக் குழைய மெல்லுதலாலும், புகைச் சுருட்டுப் பிடித்தலாலும், மூக்குத்தூள் செலுத்துதலாலும், இன்னும் இவைபோன்ற அருவருப்பான செயல்களைச் செய்தலாலும், மலக்குடலைத் துப்புரவாக வைத்துக் கொள்ளாமையாலும் பார்ப்பனர் சைவரில் எத்தனையோ பெயர் முடைநாற்றம் உடையவர்களா யிருக்கின்றார்கள்! இவர்கள் கிட்டவரின் இவர்களின் வாயிலிருந்தும் உடம்பிலிருந்தும் வரும் முடை நாற்றம் பொறுக்கக்கூடியதாயில்லை. அதுவேயுமன்றி, இவர்கள் நோய்கொண்டும் புண்கொண்டும் புழுத்துக் கிடக்கை யிலாவது இவர்கள் பிறப்பளவில் தம்மை உயர்ந்த சாதியாராகப் பேசிக் கொண்டது பெரும் பிழையென உணரக்கடவராக! விலக்கப் பட்ட சாதியார் பெரும்பாலும் நோயின்றி வலிய யாக்கை யுடையவர்களாய் எல்லார்க்கும் பயன்படுவாராய் நீண்டகாலம் உயிர்வாழ்தலையுந், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதிக்கொள்ளும் பார்ப்பனர் சைவர் முதலான ஏனை வகுப்பினரிற் பெரும்பாலார் எலும்புருக்கி ஈளை யானைக்கால் பித்தபாண்டு கொறுக்குப்புண் முதலான கொடுநோய் கொண்டு வலிவிழந்த வுடலினராய் எவர்க்கும் பயன்படாமல் விரைந்து மாய்தலையும் ஒப்பிட்டுக் காணுங்காற், பிறப்பளவிற் பார்ப்பினும் விலக்கப்பட்ட வகுப்பாரே ஏனைப் பார்ப்பனர் சைவர் முதலாயினாரைவிடத் தூயயாக்கை யுடைராயிருத்தல் புலனாகா நிற்கின்றது. வ்வியல்புகளை யெல்லாம் ஆராய்ந்து பாராமல், உயர்ந்த அம் மக்களைத் தீண்டத்தகாத முடைநாற்ற முடையரென்பது எவ்வளவு பேதைமை! அதுகிடக்க.

இனி,அம்

இனி, அம் மறுப்புரைகாரர் தீண்டாதவரைக் கோயிலினுள் விடலாகா தென்பதற்குத், திருநாளைப் போவாரென்னும் நந்தனார் வரலாற்றினை ஏன் மேற்கொள்ளலாகாதென்று எம்மை வினாவுகின்றார். மறுப்புரைகரைப் போலவே சாதிவெறி பிடித்த கோயிற் குருக்கண்மார் அந்நாளிலும் இருந்தமையின், நந்தனாரைக் கோயிலினுள் விடாதே தடுத்தனர். எல்லாம்வல்ல இறைவனை, அக் குருக்கண்மார் இழிந்தாராதலும் நந்தனார் உயர்ந்தாராதலுந் தேற்றுதற் பொருட்டு, நந்தனாரைத் தீயிற் குளிப்பித்துக் கோயிலினுட் புகுவித்தான். தீயிற் குளித்தும் பழுதுபடாத தெய்வயாக்கையுடைய நந்தனார் பெருமைக்குந்,

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/213&oldid=1583958" இலிருந்து மீள்விக்கப்பட்டது