உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

189

தீயிற்படிற் படுசாம்பராய் வெந்தொழியுங் கொழுத்த வுடலினை யுடைய அக் குருக்கண்மார் சிறுமைக்கும் உள்ள வேற்றுமை இதனால் நன்கு புலனாகின்றதன்றோ! குருக்கண்மார் நந்தனாரைக் கோயிலினுள் விடாது தடுத்தாற்போல், இறைவனும் அவரைத் தடுத்தனனா? இல்லையே; எப்படியாவது அவரை அதனுட் புகுவித்தற்கன்றோ வழிசெய்தான்? அங்ஙனம் இறைவன் அவற்குக் காட்டிய அருள் நிகழ்ச்சியினை மேற்கோனா யெடுத்துத், தீண்டாதவரெனச் சாதிக்கிறுக்கர்கள் இழித்துப் பேசும் நன்மக்களைக் கோயிலினுள் விடுவதற்குப் பரிந்து பேசுவதே சான்றோர்க்குக் கடனாயிருக்க, அதற்கு மாறாய் அம் ய் மறுப்புரைகாரர் தம்போற் சாதிவெறி பிடித்த அக் குருக்கண்மார் அவரிடத்துக்காட்டிய மருள்நிகழ்ச்சியினை மேற்கோளாயெடுக்க வேண்டுமெனக் கரைந்தார். என்னை இவர்தந் தீவினை யிருந்தவாறு!

இவரைப் போலவே, மற்ற மக்களை இழிந்தவராகக் கருதி, அவர் கூட்டத்திற் சென்று வந்த தமக்குத் தீட்டுண்டாயிற்றெனக் கருதிய நமிநந்தியடிகள் என்னும் பார்ப்பன அடியார்க்குச், சிவபிரான் அவர்கொண்ட அக் கருத்துப் பழுதாதல் காட்டி நல்லறிவு கொளுத்திய வரலாற்றினைப் பெரிய புராணத்தின்கட் பார்த்திருந்தனராயின், அம் மறுப்புரைகாரர் இவ்வாறெல்லாஞ் சாதிவெறி கொண்டு அலறார். அதுவும் பாராத அவர்தந் தீவினைக்கு யாம் இரங்குதலே யன்றி வேறு என்செய்வம்!

17. அப்பர் முதலான சிலரின் துறவு

இனிப், பௌத்த சமண்மதங்கள் தமிழ்நாட்டிற் புகுந்துவைகிய பின்னர்தான், மனைவி மக்களைத் துறந்துபோய் ஐயம் ஏற்றுண்டு பிழைக்கும் புறத்துறவு இந் நாட்டிலுள்ள சிலரால் மேற்கொள்ளப் படுவதாயிற்று என்றேம். மற்று, அம்மறுப்புரைகாரரோ, அப்பர் மாணிக்கவாசகர் பட்டினத் தார் கொண்ட துறவு, வேதத்தைச் சார்ந்த மிருதிநூல் வழியதே யன்றிப், பௌத்த சமண்வழியதன்று என்று ஏதொரு சான்றுங் காட்டாது கூறினார். இருக்கு எசுர் முதலான வேதகாலத்துப் பழக்க வழக்கங்களும், அவ்வேதங்கட்குப் பண்னூறாண்டு பிற்பட்டு வந்த மிருதிநூற்கால பழக்க வழக்கங்களும் வேறு வேறாயிருத்தலே மறுப்புரைகாரர் சிறிதும் ஆராய்ந்து

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/214&oldid=1583959" இலிருந்து மீள்விக்கப்பட்டது