உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் 16

ணர்ந்தவர் அல்லரென்பது, அவர் உரைக்கும் இப்போலி மறுப்புரையால் நன்கு புலனாகின்றது. இந்நூல் இன்னகாலத் தெழுந்தது, அக்காலத்துநிலை இன்னது, அக்கால இயல்புக்கும் அக் காலத்தில் உண்டான நூலியல்புக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை யின்னவையென்று உணரும் வரலாற்று நூலுணர்ச்சி (Historical knowledge) மறுப்புரைகாரர் சிறிதும்

உடையரல்லாமையால்,

வேதத்தோடு இயைபில்லாத

மிருதியை அதனோடு இயைபு படுத்தித் துணிபுரை கிளத்தார். அறியாமைக்கு உள்ள துணிபு தான் என்னே! இருக்குவேதத்தில் நுவலப்படும் முனிவரெல்லாரும் மனைவி மக்கள் முதலா னாருடன் செல்வவளத்தோடிருந்து இனிது வாழும் மனை வாழ்க்கையினையே தாம் வழிபடு கடவுளர் பால் வேண்டக் கண்டதல்லால், அவருள் ஒருவராயினும் அன்னாரைத் துறந்துறையும் வாழ்க்கையினை வேண்டக் காணேம்.

மற்றுப், பிற்காலத்தெழுந்த மிருதி நூல்களோ, துறவு மனைவி மக்களோடு கானகத்திருந்து மேற்கொள்ளப்படும் வானப் பிரத்த' மும் அவரை அறத்துறத்து ஐயம் ஏற்றுண்டு திரியுஞ் ‘சந்நியாச' மும் என இருவகைப்படுமென்றுரைக் கின்றன. பிற் கூறப்படுஞ் சந்நியாசம் வேதநூல்களிற் சொல்லப் பட்டிருந்தால், அதனை மறுப்புரைகாரர் எடுத்துக் காட்டு தலன்றோ செயல்வேண்டும்? அவ்வாறு காட்டுதற்கு அங்கு ஏதும் இடம் இன்மையின் அதனை வாளா கூறி யொழிந்தார். சான்றேதுங் காட்டாத இவரது போலி மறுப்புரை கொண்டே, மிருதி காலத்துக்கு முன்னிருந்த முனிவரர்க்கு, மனைவி மக்களை அறத்துறந்து செல்லும் புறத்துறவு உடம்பாடா காமை பெற்றாம். பௌத்த சமண்மதங்கள் தோன்றுதற்குமுன் இத்தகைய புறத்துறவினை எவரும் மேற்கொண்டில ரென்பது கருத்திற் பதிக்கற் பாற்று. வடமொழியில் மிகச் சிறந்த முனிவரரான யாக்கியவற்கியருங் 'காத்தியாயினி', ‘மைத்தி ரேயி' என்னும் மனைவியர் இருவரை மணந்து, அவரோ டொருங்கிருந்து துறவு நடாத்தினமை மறுப்புரைகாரர் அறியாமை இரங்கற்பாலதாகும். தமிழ் நாட்டின் கண்ணே தொல்லாசிரியரான தொல்காப்பியனாரும் மனைவி மக்களோ டிருந்து தவம்புரியுந் துறவு வாழ்க்கையினையே விதந்து அருளிச் செய்தமையினையும் முன்னரே விளக்கிப் போந்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/215&oldid=1583961" இலிருந்து மீள்விக்கப்பட்டது