உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

❖ LDM MLDMшLD -16

நிற்குமாயின், அஃது அவற்கும் பிறர்க்குத் தீது பயப்பதாகவே முடியும். அவ்வாறின்றித் தான், நுகரும் பொருள் நுகர்ச்சி யெல்லாற் தன்னையும் பிறரையும் இன்பத்தில் வளரச்செய்து, இறைவன் திருவடிப் பேரின்பத்தில் உய்க்கும் வழியேயாம் என்னும் உணர்ச்சி வலியுடையானுக்கு ஐம்புல நுகர்ச்சி நன்மை பயப்பதேயன்றித் தீமை பயவாது.

ஐம்புல நுகர்ச்சிகளும் அவை தமக்குரிய பொருள்களுத் தீமையே தருவனவாயின் அவற்றை இறைவன் நமக்குப் படைத்துக் கொடானன்றோ? உழவுத்தொழில் செய்யும் ஒருவன் தன் மகனுக்கு ஓர் அரிவாளைக் கொடுப்பது, அதனை அவன் நெற்றாள் அரிதற்குப் பயன் படுத்துவானென்னுங் கருத்துப் பற்றியே யன்றி, அதுகொண்டு அவன் மக்கள் பலரையுங் கடைசியிற் றன்னையும் வெட்டி வீழ்த்திவிட வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியன்றே? அதுபோலவே, ஐம்புல நுகர்ச்சிகளை இறைவன் நமக்குத் தந்ததும், அவற்றை நாம் நல்வழியில் துய்த்தல் வேண்டு மென்னுங் கருத்துப் பற்றியே யன்றி, அவற்றைத் துய்த்தலாகாது, அல்லது அவற்றைத் தீயவழியிற் செலுத்துதல் வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியன்று. வ்வுண்மையினையே தெய்வத் திருமூலரும்,

“ஐந்தும் அடக்கு அடக்கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை ஐந்தும் அடக்கில் அசேதனமா மென்றிட்டு ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே.’

என்றருளிச் செய்தார். ஆகவே, அகலியை மணந்து அவளோடு இன்பந் துய்த்தபடியாகவே தவவொழுக்கத்தில் உறைத்து நின்ற களதமமுனிவரை ஐந்தவித்தான்’ என்று ஆசிரியர் திருவள்ளுவர் உயர்த்து மொழிந்தது, அம் முனிவர் ஐம்புல நுகர்ச்சி வழியே தம்முள்ளத்தைச் செல்லவிடாது. தம் வழியே அவற்றின் நுகர்ச்சியை அமைத்துவைத்த ஆற்றல்பற்றியேயா ா மென்பதனை அம் மறுப்புரைகாரர் இனியேனுந் தெளிந்து கொள்ளக் கடவராக!

இனித், திருநாவுக்கரசுகள் தமதிளமைக் காலத்திற் சமண் நூல்களைக் கற்றும் சமண் முனிவர்களொடு பழகியும் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/217&oldid=1583964" இலிருந்து மீள்விக்கப்பட்டது