உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

193

கைக்கொண்ட துறவொழுக்கமே சிறந்ததெனக் கருதியன்றே, சிவநேயத்திற் சிறந்த தம் தமக்கையார் திலகவதியாரையும் ஏனைத் தமது இல்லத்தொடர்பினையும் விட்டுச் சென்று, பாழ்ங் கொள்கை (நாத்திகம்) பேசுஞ் சமண்மதம் புகுந்து தம் வாழ்நாளிற் பெரும்பகுதியை வறிதாக்கினர்? இதனை, அரசுகளே தாம் அருளிச்செய்த "ஈன்றாளுமாய் ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய்" என்னுந் திருப்பா திரிப்புலியூர்த் திருப் பதிகத்தில்,

“திருந்தா அமணர்தந் தீநெறிப்பட்டுத் திகைத்துமுத்தி

தருந்நாளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல்நெறித்தாய் பாதிரிப்புலியூர்

இருந்தாய் அடியேன் இனிப்பிறவாமல்வந் தேன்றுகொள்ளே"

என்னும் இறுதிச் செய்யுளிற் குறிப்பிட்டிருந்தல் காண்க. அரசுகள் தமது முதுமைக்காலத்தே மீண்டுஞ் சைவ சமயம் புகுந்து சிவபிரான் திருவடிக்கு ஆளானபின்னர், ளமைக் காலத்தே தாம் துறவு புகுந்தது பிசகென்றும், சைவசமயச் சான்றோர் இறைவன் திருவுளப்பாங்கறிந்து வகுத்தபடியே இன்பந் துய்த்துக்கொண்டே தவவொழுக்கத்தில் நிற்றலே சிறந்ததென்றும் உணர்ந்தன்றோ, 'வென்றிலேன் புலன்களைந்தும்' ‘பொதுத்’

மனைவியோடிருந்தது

திருப்பதிகத்தின் கண்,

என்னும்

“விளைவறி விலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன் எந்தாய், காமரங் கற்றுமில்லேன், தளையவிழ் கோதைநல்லார் தங்களோடு இன்பம்எய்த

இளையனும் அல்லேன் எந்தாய், என்செய்வான் தோன்றினேனே” என்று அருளிச்செய்தார். இவ்வாறாக, அப்பர் முதலில் மேற்கொண்ட துறவு சமண்மத வழித்தாதல் தெள்ளிதிற் புலப்படுவதாகவும், அஃது அவ்வழித் தன்றென்று கரைந்த அம் மறுப்புரைகாரருரை பெரும் புளுகுரையாதல் தேர்ந்து கொள்க.

இனி, மாணிக்கவாசகரோ அப்பரைப்போற் சமண்சமய மாதல் பௌத்தசமயமாதல் சிறந்ததெனக்கொண்டு அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/218&oldid=1583965" இலிருந்து மீள்விக்கப்பட்டது