உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 16

விரண்டில் ஒன்றிற் றுறவு புகுந்தவரல்லர். அவர் தெய்வம் ஒன்று உண்டு எனத் துணிந்த காலத்தில், ஒன்றினொன்று மாறுபட்ட பல சமயக்கொள்கைகளால் உள்ளங்கலங்கி, ஒன்றிலுந் துணிவு பிறவாது நின்றார்; அப்போது சடுதியில் இறைவனே குருவடிவிற் போந்து அவரைத் தன்வயப்படுத்திக் கொண்டான். இஃது, அவரே அருளிச்செய்த போற்றித் திருவகவலில்,

“தெய்வம் என்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறுகோடி மாயாசத்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின; ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தமும் பேறினர்; சுற்றமென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும், விரதமேபர மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்; மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித்து ஆஅர்த்து உலோகா யதனெனும் ! ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி

அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்,

மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே.

எனக் கூறுமாற்றால் தெற்றென விளங்கா நிற்கும், இறைவனால் அங்ஙனம் ஆட்கொள்ளப் பெற்ற பின்னுஞ், சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புடையரான அவர்தம் மனைவியாரும் புதல்வியும் அவர் தம்முடனேயே யிருக்கப்பெற்றார் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/219&oldid=1583967" இலிருந்து மீள்விக்கப்பட்டது