உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

195

உண்மையினை எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் நன்கு விளக்கியிருக்கின்றேம். எனவே, மாணிக்கவாசகர் தம் அருமை மனைவியாரையும் மகளா ரையும் விட்டுத் துறவு புகுந்தவரல்ல ரென்பது நன்கு பெறப் படுதலால். அம் மறுப்புரைகாரர் அவரை மிருதிவழித்தான துறவு புகுந்தவர் என்றுரைத்தது பொருந்தாப் பொய்யு ரையாதல் கண்டுகொள்க.

இனிப், பட்டினத்தடிகள் புகுந்த துறவு பண்டைச் சைவ சமயச் சான்றோர்க்கு உடம்பாடாகாததொன் றென்பதும், அதனை அவரே பின்னருணர்ந்து அகத்துறவினையே மேல தாய்க் கூறினரென்பதும் முன்னரே விளக்கிப் போந்தாம். இவ்வளவில் அம் மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவுக்கும் விடைகள் தரப்பட்டன. இதுகிடக்க.

பின்னுரை

விடைகளை

அம்

மேலெழுதிய எம்முடைய ய மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகளோடு உடன்வைத்து நடுநின்று காணவல்ல மெய்யறிவினார்க்கு, எமதுரையின் மெய்ம்மையும் அவருரையின் பொய்ம்மையுந் தாமே புலனாம். அவர் தாமும் நடுவுநின்று நோக்குவராயின் எமதுரையே மெய்யாதல் காண்பர். ஆனால், தமதுரைப் பிழையைத் தாம் ஒப்புக்கொண்டால் உலகந் தம்மைப் பாராட்டாதெனக் கருதிச், சென்ற ஐப்பசி 16 இலும் 26 இலும் வெளிவந்த 'சிவநேசன்' இதழில், எமதுரையை 'வெற்றுரை' யெனப் பழித்து உள்ளீடழிந்த பதர் மொழிகளையே நிறைத்திருக் கின்றார். அவர் நிகழ்த்திய தடைகளையெல்லாவற் றிற்கும் விடைகள் எமது ஞானசாகர இதழில் யாம் முறையாக எழுதி வருதலையும் பாராது, 'சித்தாந்த’ இதழிற் பலரும் எழுதுங் கட்டுரை கட்கிடையே முழுதும் வெளியிடுவியாமல் ஒரு சிறிதே வெளியிடுவித்த எமது விடையுரையின் முதற்பகுதியை மட்டும் பார்த்துவிட்டுத், தாம் நிகழ்த்திய தடைகள் எல்லாவற்றிற்கும் யாம் விடையெழுதிற்றிலேமென ஆராயாது கூறி மகிழ்ந்தார். இனி, அவர் மீண்டுங் கூறிய தடைகட்கு விடைகளைச் சுருக்கிக் கூறி அவ்வளவில் இதனை முடிப்பாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/220&oldid=1583968" இலிருந்து மீள்விக்கப்பட்டது