உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

199

மறுப்புரைகாரர் பொய்ந் நாவினை அறக் கடவுளே ஒறுக்கற்பாலதென்க.

இனி, அம் மறுப்புரைகாரர் அறத்தை முன்வைத்துச் சொல்லுந் தேவாரதிருவாசகச் செந்தமிழ்மாமறைச் செய்யுட்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, அவ்வருள் நூல்களில் அறமே முன் வைத்துரைக்கப் பட்டமையின் அதுவே முதன்மையுடைத்தென்றார். அற்றேல், தேவார திருவாசகங்கள் தோன்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னே தோன்றி அறுதியில் தமிழின் உறுதிப்பொருட்பரப் பெல்லாம் ஒருங்குண்ட தொல்காப்பியம்' அருள் நூலன்றோ? தொல்காப்பியத்தில் இன்பமே முதல் வைத்து மொழியப் பட்டிருத்தலானும், மக்கள் இம்மையிற் றுய்ப்பதும், மறுமையிற் சிவபிரான் திருவருளிற் கலந்து துய்ப்பதும் இன்பமேயன்றி ‘அறம்' அன்று ஆகலானும், அறம்' எனப்படுவதும் ஏனையுயிர்க்குந் தன்னுயிர்க்கும் இன்பத்தைச் செய்யுஞ் செயலேயாகலானும், 'பொருள்' எனப்படுவதும் அங்ஙனமே பிறவுயிர்க்குந் தன்னுயிர்க்கும் இன்பத்தைச் செய்வதற்குக் கருவியேயாகலானும், அவ்வாற்றல் அறமும் பொருளுங்கூட இன்பத்துள் அடங்குதலானும், தொல்லாசிரியரான தொல் காப்பியனார் ன்பத்துக்கு முதன்மை தந்து அதனை முதற் கண் நிறுத்தினமையே சாலப் பொருந்துவதாமென்க. பௌத்த சமண் கொள்கைகள் மிகப்பரவி, அவ்வாற்றல் அறத்தை முன் வைத்துரைக்குமுறை மிக்குவழங்கிய காலங்களில் திருவாசக தேவாரங்கள் தோன்றின வாகலின், அவற்றுள்ளும் அம் முறை புகலாயிற் றென்றறிந்து காள்க. அறஞ் செய்தலாற் பிறர்க்குந் தமக்கும் இன்பம் விளைதலே அறிய வல்லவர் மக்களேயன்றி ஏனைச் சிற்றுயிர்கள் அல்ல.

சிற்றுயிர்களெல்லாந் தம்மளவில் இன்பம் நுகர்வன; மக்களோ பிறர்க்கும் நன்றாற்றிப் பெரிதும் இன்பம் எய்துவர். இங்ஙனம் எய்தும் இன்பம் மக்கட்கே சிறந்தமையின், ஆகவே முதன்மை யுடைத்தென்பது. இது பற்றியன்றே தெய்வத் திருவள்ளுவரும் “அறத்தான் வருவதே இன்பம்” என்றருளிச் செய்தார். இப் பெற்றித்தாகிய இன்பத்தை விட்டு அறம் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/224&oldid=1583972" இலிருந்து மீள்விக்கப்பட்டது