உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் 16

தன் நில்லாமையின் அஃது இன்பத்திற்குப் பின்னா வதே யன்றி முன்னாம் முதன்மை யுடைத் தன்றென உணர்ந்து கொள்க.

இனிப், பெளத்த சமண் கோட்பாடுகள் இங்கே மிகவும் பரவி, அறம் அல்லாதவைகள் அறம் எனக் கொள்ளப் பட்டமையின், இன்பத்தின் வழித்தாகிய அறம் இன்ன தெனவுணர்த்துதற்குத் திருவள்ளுவர் அறத்தை முன்னெடுத்து, அச் சொல்லால் தனக்கும் பிறர்க்கும் இன்பத்தை விளைத்தற் கேதுவாகிய ‘இல்லறத்’ தை முதற்கண் நிறுத்தி வலியுறுத்தார். மற்று, அம் மறுப்புரைகாரரோ, தொல்காப்பியனார் காலத்து மக்கட்கு அறவுணர்ச்சியின்றி, இன்பவுணர்ச்சியே மிக்கிருந்த மையின் அவர் அதனை முதலிற் கூறினாரென்று ரன்று ஏன் கூறுதலாகாதென்று வினவுகின்றார். சான்றில்லாமல் ஒன்றைத் தானாகவே படைத்து மொழிதல், பொய்கூறுவார்க்கன்றி மெய்ம்மை யுடையார்க்கு ஏலாது. மேலும், இன்பவுணர்ச்சியே தலைக்கொண்ட தொல்காப்பியனார் காலத்து நன்மக்கட்கு, இன்பத்தைச் செய்யும் அறவொழுக்கமே உளதாகுமன்றித் துன்பத்தைச் செய்யும், மதவொழுக்கம் உளதாகாதென்று அம் மறுப்புரைகாரர் அறியக் கடவராக!

இனித், திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் வேதத் தாடர்புடையதாகுமென்ற அம்மறுப்புரைகாரர், எந்த வேதத்தொடு தொடர்புடைய தென்பதனை விளக்கினாரில்லை. இப்போது வேதம் என வழங்கும் இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்பவற்றொடு தொடர்புடைய தென்பது அவர் சுருத்தாயின், அவ்வாரிய நூல்களிலுள்ள பொருள்களையுந் திருக்குறளி லுள்ள பொருள்களையும் எடுத்துக்காட்டி அவ்விரண்டற்கும் உள்ள பொருளொற்றுமையினை அவர் விளக்கியிருத்தல் வேண்டும்; அவ்வாறவர் செய்திலாமையின் அவர் கூற்று உள்ளீடில்லா வெறும் பதரேயாம். திருக்குறள், இருக்கு முதலான ஆரிய நூற்றொடர்பு உடையதன் றென்பதனை வேளாளர் நாகரிகம் முதலான எம்முடைய நூல்களில் நன்கு விளக்கி யிருக்கின்றோம்; ஆண்டதனைக் காண்க.

இனி, ஆரியத்திற்குக் குறை சொல்லலும், வேதாகமக் கருத்துக்கு வேறானா தனித்த ஒரு நூலுண்டென்பதுந் தீவினையாளர் செயல் என்று கூறி அம் மறுப்புரைகாரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/225&oldid=1583974" இலிருந்து மீள்விக்கப்பட்டது