உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

201

இகழ்ச்சியுரைகளை வாரியிறைத்துத், தமது தோல்வியைப் பிறிதொன்று சொல்லி மறைக்கின்றார். இவர் வேதாகமம் எனக் கொண்டவை யாவை? இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்றுங், காமிகங் காரணம் யோகசம் சிந்தியம் என்றும் வழங்கும் வடமொழி நூல்கள் தாமா? இந் நூல்களை வேதம் என்றும் ஆகமம் ன்றும் வழங்கியவர்கள் யாவர்? அவர் காலம் யாது? அவ்வாரிய நூல்களிற் சொல்லப்பட்ட பொருள்கள் யாவை? அவைகளைத் தழுவித் தமிழில் நூல்கள் இயற்றினார் யார்? அவர்களிருந்த காலம் என்னை? நான்கு வேதங்களும் ரே காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா? இருபத் தெட்டாக மங்களும் அங்ஙனமே ஒரு காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா? அருணந்தி சிவாசாரியார் வேதநூல் என்றுஞ் சைவ நூலென்றுங் குறிப்பிட்டவை மேற்சொன்ன ஆரிய நூல்கள்தாம் என்பதற்குச் சான்றென்னை?

அருணந்தியார் காலம் யாது? மறுப்புரைகாரர் கொண்ட ஆகமங்கள் அருணந்தியார் காலத்திற்கு முன்னிருந் தவை யென்பதற்குச் சான்றென்னை? இருக்கு முதலிய வட நூல்களிற் பிரகிருதிக்கு மேற்பட்ட பன்னிரண்டு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றனவா? திருநீறும் உருத்தி ராக்கமுஞ் சிவபிரான் திருக்கோயில்களும் இருக்கு எசுர் முதலிய நூல்களிற் சொல்லப்பட்டிருக்கின்றனவா? என்றற்றொடக் கத்து

வினாக்களுக்கு விடையாக ஆராய்ந்து நிறுவற்பாலன வற்றை மெய்ச்சான்றுகளுடன் நிறுவினாலன்றி, அம் மறுப்பு ரைகாரர் பொறாமையுஞ் செருக்குஞ் சினமுங்கொண்டு எமக்கு மாறாய் வடநூல்கட்கு ஏற்றஞ் சொல்லும்உரை, சிறுமகார் கலாம் விளைத்து ஏசும் உரையாகவே ஒதுக்கற் பாலதென்க. இருக்கு முதலான ஆரிய நூல்களிற் கொலை குடி சூது வரையிறந்த காமம் பொய் முதலான கொடுந்தீயொழுக்க உரைகளே நிரம்பியிருக்கதலையுந், திருக்குறள் முதலான தெய்வச் சந்தமிழ் நூல்களில் அவற்றை மறுத்த நல்லொழுக்க அறிவுரைகளே நிரம்பியிருத்தலையும் அம்மறுப்புரைகாரர் ஆராய்ந்து கண்டனராயின் இங்ஙனமெல்லாம் எம்மேற் சினங்கொண்டு கூவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/226&oldid=1583976" இலிருந்து மீள்விக்கப்பட்டது