உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் 16

அவ்விருவகை நூல்கட்குமுள்ள வேறுபாடுகளை அந் நூல்களில் கண்டறிய மாட்டாத அவர் மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது நூலாயினுங் கண்டறிந்து தெளியக் கடவராக! மேற் சொன்ன ஆரியநூல்களிலுள்ள குறைகளை எடுத்துக் காட்டு தலுந், தமிழ் நூல்களிலுள்ள நலங்களை எடுத்து விரித்தலுங் குற்றமாகுமா? களிம்பேறிய செம்பைச் செம்பென்றுங், களிம்பில்லாச் சுடர்விரி பசும்பொன்னைப் பொன்னென்றுங் கூறுதல் குற்றமாகுமா? செங்கல்லைச் செங்கல் லென்றுஞ், செஞ்சுடர் எறிக்குஞ் செம்மணியைச் செம்மணி யென்றுங் கூறுதல் குறையாகுமா? உயிரை மாய்க்கும் பாம்பின் நஞ்சை நஞ்சென்றும், உயிரை வளர்க்குந் தீம்பாலமிழ்தை அமிழ்தென்றும் மொழிதல் பழிப்பாகுமா? இவை தம்மையெல்லாம் ஆராய்ந்துபாராது, தீயநஞ்சையுந் தீம்பாலையும் ஒன்றாகப் பாராட்டல் வேண்டு மென்பாரோடொத்துத், தீதுநிறைந்த ஆரிய நூல்களையும், நலன்நிறைந்த தமிழ் நூல்களையும் ஒருங்கு பாராட்டல் வேண்டுமென்னும் அம் மறுப்புரைகாரர், தாம் வேலை பார்க்கும் இடத்தில் தாம்பெறும் வெள்ளிக் காசுகளுக்கு மாறாக, ஓட்டுச் சல்லிகளைப்பெற்று மகிழ்ந்திருப்பரா? பகுத்தறி வில்லா இவருரை வருரை சிறுமகாரானும் எள்ளி நகையாடற்பாலதா மென்றுணர்க. தீதுநிறைந்த ஆரியநூல்களின் குறைகளைத் தாம் எடுத்துக்காட்டினமேயன்றி, நலன்நிறைந்த பன்னிரண்டு பழைய உபநிடதமறைகளை அவ்வாறு செய்தனமா? அவ்வுபநிடதங் களை யாம் பாராட்டிப் பேசியிருத்தலை இவர் அறியாராயின், அவ்வறியாமைக்கு யாம் என்செய்வேம் என்க.

ஆரிய

இனிக், காதலின்பத்தின் வழியானன்றி இல்லறம் இனிது

நடவாமை,

“காதன் மடவாளுங் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமஞ் செய்பவே”.

என்னும் ஆன்றோர் திருமொழியால் நன்கு விளங்கா நிற்கவுந், திருவள்ளுவர் இல்லறவியலிற் காதலின்பங் கூறிற்றிலர் என்று மறித்தும் மறித்தும் அரற்றுகின்றார் அம் மறுப்புரைகாரர்; “தெய்வந்தொழாஅள் கொழுநற், றொழுதெழுவா ளாகிய மனைவிக்குக் காதலன்பு வாய்ப்பினன்றி, அவள் அவனை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/227&oldid=1583977" இலிருந்து மீள்விக்கப்பட்டது