உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

203

பொருட்டாக வையாளென்பதை அறியமாட்டாத அவர்க்கு அறிவுதெருட்டும் வாயிலில்லை யென்று விடுக்க. தருக்க முறையும் ஆராய்ச்சி முறையும் நன்கறியமாட்டாத அம் மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவும் பிழைபாடு டை யவென்பது, தமிழ் ஆரியம் ஆங்கிலம் என்னும் மொழி நூல்களில் உண்மையாராய்ச்சி செய்தார்க்கு வெள்ளிடை மலைபோல் விளங்கு மாதலின், மறுப்புரைகாரர் கண்டறிந்த தோல்வித்தனங்கள் அத்தனையும் அவர்க்கே உரிமை யுடையன வென்பது பொள்ளெனப் புலனாம்.

“அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார்".

ஓம் சிவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/228&oldid=1583978" இலிருந்து மீள்விக்கப்பட்டது