உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

2. திருவசக விரிவுரையிற் சிலர் நிகழ்த்திய தடைகளுக்கு விடை

திருவாசகச் சிறப்புப் பாயிரவுரையில் யாம் பின்வருமாறு

எழுதினேம்:

66

ஒருநூல் கேட்பான் புகுவோர் அதனை ஆக்கியோன் பெருமை உணர்ந்தன்றி அதுகேட்டலிற் கருத்து ஊன்றாராக லானும், நக்கீரனார், ளம்பூரணர் முதலான தொல் உரையாசிரிய ரெல்லாம் முதற்கண் ஆக்கியோன் பெருமை உரைத்தாராகலானும் முதலில்

கூறல்வேண்டு மென்றே

ஆக்கியோன் பெருமை கூறவேண்டுவது கடமையாம் என்க”

யாங் கூறிய இப் பகுதிமேற் சிலர் ‘நக்கீரர், இளம்பூரணர் முதலியோர் ஆசிரியன் பெயர் கூறல்வேண்டும் என்பதே யன்றிச் கூறல்வேண்டுமென்று சொல்லவில்லையே'

சிறப்புக் என்கின்றனர்.

ஆசிரியர் நக்கீரனார் “ஆக்கியோன் பெயர் என்பது நூல் செய்த ஆசிரியன் பெயர் என்றவாறு. இந்நூல் செய்தார் யாரோ வெனின் மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர் குழவித் திங்களைக் குறுங்கண்ணியாக உடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுளென்பது' என்று இறையனாரகப் பொருணூலின் முகத்து உரை கூறினார்.

இனி இளம்பூரணர் தொல்காப்பியச் சிறப்புப்பாயிர வுரையில் தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி' என்பதற்குப் ‘பழைய காப்பியக் குடியினுள்ளோனெனத் தன் பெயரைத் தோற்றுவித்து அவ்வாறு தொகுத்தான். அவன் யாரெனின், தவத்தான்வரும் பல்புகழ்களை உலகிலே நிறுத்தின தவ வொழுக்கத்தினை யுடையான்' என்று உரை கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/229&oldid=1583979" இலிருந்து மீள்விக்கப்பட்டது