உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

205

இவ்வாசிரியர் இருவரும் ‘ஆக்கியோன் பெயர்' என்பதற்கு ஆக்கியோன் இயற்பெயர் மட்டுமேயன்றி அவன் பெருமையும் தனித்தனி எடுத்துக் கூறினார். நக்கீரனார் ஆசிரியன் பெயரும் பெருமையும் எடுத்தோதினாரேனும், ளம்பூரணர் தாம் உரை கூறியது பனம்பாரனார் அருளிய “வடவேங்கடந் தென்குமரி” என்னும் யாப்பிற்கே யாமாகலான், அவர் தனியே ஆசிரியன் பெருமை கூறிற்றிலராலெனின்; ஆசிரியர் தொல்காப்பியனா ரோடு ஒருங்குகற்ற பனம்பாரனார் தொல்காப்பியனார் பெயரும் பெருமையும் விளங்க எடுத்துரைத்துப் பாயிரயாப்புச் செய்தருளினமையின், அவரது ஆணைவழி நிற்கும் உரைகாரரான தாம் அதற்குப் பொழிப்பு உரைக்கும் முகத்தான் அவ்விரண்டும் விளக்கி அதுவே சாலுமென அவ்வளவின் நின்றாரென்க. பாயிர யாப்புச்செய்த பனம்பாரனார்க்கு ஆசிரியன் பெயரோடு பெருமையும் எடுத்தோதுவது கருத்தாகவே,அதற்கு உரை கண் இளம்பூரணர்க்கும் அவ்விரண்டும் உடன்கூறுதல் உடன் பாடென்பதுபெறுதும்.

66

அஃதொக்குமாயினும், சிறப்புப்பாயிரத்தின்கட் சொல்ல வேண்டுமெனப்பட்ட, ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோ டாயெண்பொருளும், வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே' என்னும் எட்டனுள் முதற்கண் ஆக்கியோன் பெயர் என்று மட்டுஞ் சொல்லியதென்னை, அதனால் ஆக்கியோன் பெருமை கூறல்வேண்டுமென்பது பெறப்படாதாலெனின்; ஆக்கியோன் பெயர் என்பதற்கு ஆக்கியோன் இயற்பெயர் கூறுதல் ஒன்றுமே எனப் பொருள் கொள்ளின், தொல் காப்பியனாரோ டொத்த பெரும்புலமைச் சான்றோரானை பனம்பாரனார் ‘தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி' என்று அவர் பெயர் எடுத்தோதிய அளவின் அமையாது, பின்னும் ‘பல்புகழ் நிறுத்த படிமை யோனே' என்று அவர் பெருமையும் உடன் கூறியதூஉம், அதற்கேற்ப இளம்பூரணர் உரை உரைத்ததூஉம், ஆசிரியர் நக்கீரனாரும் இறையனாரகப் பொருள் பாயிரவுரையில் ஆசிரியன் பெயரும் பெருமையும் எடுத்தோதியதூஉம் என்னையென்று வினாவுவார்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/230&oldid=1583980" இலிருந்து மீள்விக்கப்பட்டது