உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

  • மறைமலையம் -16

'பெயர்’ என்னுஞ்

இறுக்கலாகாமையின், சொல்லிற் பருமையும் அடங்கிக் கிடக்கின்றதென்று ஓர்ந்துகொள்க. இங்ஙனமே ‘மன்னிய சிறப்பின்' என்னும் புறப்பொருள் வண்பாமாலைச் சிறப்புப்பாயிரத்தும் “துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற், பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த, பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன், ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட, வாங்குவிற் றடக்கை வானவர் மருமான், ஐயனாரிதன்' என்று அதன் ஆக்கியோன் பெயரான ஐயனாரிதன் என்பதனோடு அவன் பெருமையும் உடன் கூறப்பட்டது. சிவ ஞானபோதச் சிறப்புப்பாயிரத்தும் "பொய்கண்டகன்ற மெய் கண்ட தேவன், பவநனி வன்பகை கடந்த, தவரடி புனைந்த தலைமை யோனே" என்று ஆசிரியன் பெயரும் பெருமையும் உடன் ஓதப்பட்டன. நன்னூற் சிறப்புப்பாயிரத்துள்ளும் "பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள், பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி, என்னுநாமத் திருந்தவத் தோனே" என்று ஆசிரியன் பெயரும் பெருமையும் உடன்போந்தவாறறிக.

L

இவ்வாறு “ஆக்கியோன் பெயர்" என்பதற்கு அவனது இயற்பெயரேன்றி அவன் பெருமையும் உடன் கொள்ளக் கிடக்குமென்பது பற்றியன்றே ஆசிரியர் சிவஞான முனிவரரும் "இந்நான்கு முணர்ந்தவழியும், கற்றுவல்ல சான்றோர் அல்லாராற் செய்யப்பட்ட நூலாயிற் கூறியது கூறல் முதலாய குற்ற முடைத்தாமன்றே யெனவும், கற்றுவல்ல சான்றோரும் மற்றோர் கோட்பாடுபற்றிச் செய்யின் முனைவனூலோடு முரணுமன்றே யெனவும் ஐயுற்று ஊக்குஞ் செல்லாமையின் அவ்வையம் நீக்குதற்பொருட்டு ஆக்கியோன் பெருமையும், நூற்பெருமையும், அந்நூல் வழங்கு நிலமும், அதன் முதனூலும் இவையென்பது தோன்ற “ஆக்கியோன் பெயரும்வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல் வேண்டும்' தொல்காப்பியப் பாயிரவிருத்தியில் உரைத்தருளுவாராயினர் ஆசிரியர் சிவஞான முனிவரர் தெளித்துரைத்த இவ்வரும் பறலுரைகொண்டு ஆக்கியோன் பெயர்' என்பதற்கு ஆக்கியோன் இயற்பெயரும் அவனது பெருமையும் என்று பொருள்கொள்ளவேண்டுமென்பது பெறப்படுகின்றதன்றோ?

என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/231&oldid=1583982" இலிருந்து மீள்விக்கப்பட்டது