உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

207

பெயர்' என்னுஞ் சொல் புகழ் என்னும் பொருளையும் உணர்த்தல் “இருபிறப்பு இருபெயர் ஈரநெஞ்சத், தொருபெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே” என்னும் பதினான்காம் பரிபாடலடிகளிற்போந்த ஒருபெயர்’ என்பதற்கு 'ஒப்பில்லாத புகழ்’ என்று பரிமேலழகியார் உரை கூறியவாற்றான் அறிந்துகொள்க. இங்ஙனம் பெயர் என்னுஞ் சொல்லால் ஆக்கியோனது இயற்பெயரேயன்றி அவனது புகழும் குறிப்பிடப்படுதலால் அன்றே, தொன்னூல்கட்குப் பாயிரம் வகுத்த நல்லிசைப் புலவரெல்லாம் ஆசிரியன் இயற்பெயரோடு அவன் பெருமையும் உடனெடுத்து ஓதுவாராயினரென்க. ஈதுணர்ந்தே நக்கீரனாரும் இளம்பூரணரும் ஆக்கியோன் பெருமை நூன் முகத்துக்கூறல் வேண்டுமென்றார் என உரைகூறினாம். ஆதலால், அது வழுவன்மை உணர்க.

இனி வேறு சிலர் ‘சிறப்புப்பாயிரத்துள் நூற்பெருமை கூறுதல் ஒன்றே அமையும். அதனால் ஆக்கியோன் பெருமை தானே விளங்குமாகலின் ஆக்கியோன் பெருமை வேறுகூறல் வேண்டாம்' என்று தடை நிகழ்த்துகின்றார்.

ஆக்கியோனது அறிவின் பெருமையைத் தக்கார்பலர் கூறக்கேட்ட பின்னரே அவன் இயற்றிய நூலினைக் கற்றற்கு விரும்புவர். சிறப்புப்பாயிரம் என்பது ஒருநூலினது வரலாறு தெரித்து அதனைப் பலருங் கற்கும்படி ஏவுவதாகலானும், ஆக்கியோனின்றி ஒருநூல் ஆக்கப்படாமையானும் முதற்கண் ஆக்கியோன் பெருமை கூறுதல் எல்லார்க்கும் உடன்பாடாம். மேலும், ஆக்கியோன்பெருமை நூற்பெருமையுள் அடங்காது, நூற்பெருமை ஆக்கியோன் பெருமையுங் அடங்கும். யாங்ஙன மெனின், ஆக்கியோன் அறிவு எல்லையில்லாத பரப்பினை யுடைய தாகலின் அஃது எத்துணையோ நூல்களை எத்துணை யோ வகையாக இயற்றவல்லும்; ஆதலால், அவனதறிவு அவனியற்றிய ஒரு நூல் அளவிலே அடங்குவதன்றாம். மற்று அவனியற்றிய ஒரு நூற்பெருமையோ ஓர் எல்லைக்குட்பட்டு அவனறிவின் ஒரு பகுதியிலே அடங்கும். ஆதலால், ஒரு நூற்பெருமைகொண்டு அதனை ஆக்கிய ஆசிரியர் அறிவின் பெருமை முற்றும் உணர்தல் ஏலாது. ஒருவன் ஒரு கணக்கு நூல் இயற்ற, அந்நூலுதவிகொண்டு அவனை அறியப்புகின் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/232&oldid=1583983" இலிருந்து மீள்விக்கப்பட்டது