உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 16

து

அற்நூலே யன்றி வேறு மருத்து நூலுங் கோணூலும் பயிர்நூலும் உயிர் நூலும் உளநூலும் அறிவுநூலுமெல்லாம் இயற்றவல்லான் என்பது அறிதல் இயலாது. அவ்வாறெல்லாம் இயற்றவல்லன் என்பதை அறிந்தோர் வேறு தனியே எடுத்துக் கூறினால் மட்டுமே அவனது அறிவின் அகலம் புலப்படும். போலவே, திருவாசகம் என்னும் இவ்வொரு நூற்பெருமை கொண்டே மாணிக்கவாசகப்பெருமான் அறிவின் பரப் பெல்லாம் அறிதல் ஏலாது; அவரது அறிவு இதுபோல் இன்னும் எத்தனையோ நூல்களையெல்லாம் பல திறமாய் இயற்ற வல்லமாட்சி யுடையது. அதனால் அப் பெருமானாகிய ஆக்கியோன் பெருமை வேறு தனித்துக் கூறல்வேண்டுமென்று கடைப்பிடிக்க.

'சிவாயசிவ' என்பதே அதிசூக்கும பஞ்சாக்கரமாகு மென்று ஆசிரியர் திருமூலநாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாட்டினால் இனிது விளக்கிக் காட்டியிருக்கின்றோம். அதற்குமாறாகச் ‘சிவயவசி' என்பதே அதிசூக்கும் பஞ்சாக்கர மாகுமென்று கூறுவார் அதனை நிறுவுதற்கேற்ற பிரமாணம் காட்டி அதனை நிறுத்துதல் வேண்டும். தக்க பிரமாணம் ஒன்றுதானுங்காட்டாமல்

யாங் கூறியது அதிசூக்கும பஞ்சாக்கரம் அன்றென்றல் யாங்ஙனம் பொருந்துமோ அறிகிலேம்.

தூலம் சூக்குமம் அதிசூக்குமம் எனப் பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் முறை மூன்றேயெனவும், அவற்றின்மேலும் மகா காரணம் முத்தியென வேறிருமுறையும் உண்டென்றற்குத் திருமூலர் திருமந்திரத்தினாதல் சைவசித்தாந்த நூல்களினாதல் பிரமாணம் கண்டிலேம் எனவும் எழுதினேம். இதனை மறுக்கப் புகுவார் பஞ்சாக்கரத்தை ஓதும் முறை ஐந்து என்றற்குப் பிரமாணங்காட்டி, அதன்பின் மகாகாரண பஞ்சாக்கரம் இது வெனவும் முத்தி பஞ்சாக்கரம் இதுவெனவும் கூறும் உயர்ந்த பிரமாணங்களைத் தெளிவாய் எடுத்துக்காட்டித் தங்கருத்தை இனிது விளக்குதலே முறையாம். அதனை விடுத்து, ‘வசி’ எனும் ஈரெழுத்தைத் திருஞானசம்பந்தப்பெருமான் தமது பதிகத்தில் எடுத்து மொழிதலானும், காமிகாகமம் அவ்வீரெழுத்தினையும் மகா மநு என்று கூறுதலானும் அதனை மகாகாரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/233&oldid=1583984" இலிருந்து மீள்விக்கப்பட்டது