உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

209

பஞ்சாக்கரமென்று கூறல்வேண்டுமென்றல் யாங்ஙனம் பொருந்துமோ அறிகிலம். சிவ எனும் மொழியை அடுத்தடுத்து ஓதுங்கால் அது முன்பின்னாகமாறி ‘வசி' எனவும் நிற்கும். சிவ எனும் மொழி மகாமந்திரம் என்றலில் எவர்க்கும் ஐயப்பாடின்று. ஆனால், அஃது ஐந்தெழுத்தாய் நில்லாது ஈரெழுத்தாய்மட்டும் நிற்றலின் அதனை மகாகாரண பஞ்சாக்கரம் என்று உரைத்தல் யாங்ஙனம் பொருந்தும்?

ஓதல்

இனி,அருளுஞ் சிவமும் குண குணிகளாய்த் தாதான்மிய மாய் நிற்றலால் ஒன்று மற்றொன்றில் ஒடுங்குமாறு சிறிதுமில்லை யெனவும், அதனால் அவ்வீரெழுத்தில் வகரத்தை விடுத்துச் சிகரத்தைமட்டும் முத்திபஞ்சாக்கரம் என்றல் பொருந்தாதெனவுங் கூறினேம். இதனை மறுத்துச் சிகாரமே முத்திபஞ்சாக்கரம் ஆமென நாட்டப்புகுவார் அதற்கேற்ற உண்மைப் பிரமாணங் காட்டுதலோடு, ஓரெழுத்தாய் நிற்கும் அதனைப் பஞ்சாக்கரம் அல்லது ஐந்தெழுத்து எனக் கூறுதற்கு இசைந்த அடைவும் இனிது விளக்கிக்காட்டுதல் வேண்டும். இவையெல்லாம் தொடர்புறக்காட்டாது வாளா கூறுதல் ஏற்றுக்கோடற்பால தன்று.

சிவபெருமானே'

இனி, ஒருசாரார் ‘ஆகமம்' வேதத்திற்குப் பிந்தியதென்றல் யாங்ஙனம்? அஃது அதற்கும் முன்னே கிருதயுகத்தில் சிவபெரு மானால் அருளிச்செய்யப்பட்டதன்றோ? அஃது இறைவனா லன்றி அறிவுடையோரால் இயற்றப்பட்டதென்றல் 'வேதா கமங்களை ஆக்கியோன் என்னும் திருவாக்குகளுக்கு மாறாய் முடியுமன்றேவெனின், வேதங்கள் முன்னும் ஆகமங்கள் பின்னுமாக அறிவுடையோரால் இயற்றப்பட்டனவேயாம் என்பதனை உரையுள் விரிவாக விளக்கியிருக்கின்றோம், மீட்டும் அவற்றை இங்கு விரிக்க வேண்டுவதின்று. “எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்னுந் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் கட்டளையின் படி, வெறு நம்பிக்கையாய் எழுதிவைத்தவை களையும் சொல்லு வனவற்றையும் ஆராயாது நம்புதல் மேன்மேல் அறிவு விளங்குதற்கும் உண்மைகாண்டற்கும் ஆகாதவாறு தடை செய்யுமாகலின் எவற்றையும் ஆராய்ந்து, அவ்வாராய்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/234&oldid=1583985" இலிருந்து மீள்விக்கப்பட்டது