உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

நடுவுநிலைமையோடு

மறைமலையம் 16

முடிவில் உண்மையெனப் பெறப்பட்டதனைத் தழுவுதலே அறிவுடைமைக்கு அழகாம். ஆதலால், வேதம் ஆகமம் என்னும் இரண்டையும்பற்றி யாம் ஆராய்ந்து கூறியவற்றை படித்துப்பார்த்து, அவற்றிற் பொருந்தாதன இருந்தால் அவற்றைத் தக்ககாரணங்களோடு எடுத்துக்காட்டி, பின்னர்த்தாங்கூறுவனவே பொருத்தமா மென்று ஒழுங்காகக் காட்டுதலே செயற்பாலதாம். ஆகமம் வேதத்தினும் காலத்தால் மிகப் பிற்பட்டதென்பதற்கு, வேதங்கள் எழுதப்பட்ட ஆரிய பாஷை மிகப் பழையதாதலும், ஆகமங்கள் எழுதப்பட்ட சமஸ்கிருத பாஷை மிகப்புதிய தாதலுமே ஒரு தக்க சான்றாம். விரிக்கிற்பெருகும்.

திருவாசகம் வடமொழியில் உள்ள வேதமேபோல மந்திர மொழிகளால் ஆக்கப்பட்டிருத்தலின் அதனைப் பொருள் தெரியாமல் ஓதினும் அது வீடுபேற்றின்பத்தினைத் தரும், அத்தகைய நூலுக்கு உரை எழுதுதல் குற்றமாம்; இதுபற்றியே பண்டை நாளிலிருந்த உரையாசிரியர் எவரும் இதற்கு உரை எழுதிற்றிலர்; அருணூலாகிய இதன் பொருளாழத்தைக் கண்டறிதல் நம்மனேரால் ஆகாமையின் இதற்கு உரை எழுதத் துணிந்தது எரிவாய் நிரயத்திற் புகுதற்கே ஏதுவாம் என்று ஒருவர் ஒரு பத்திரிகையில் எம்மை மிகவும் இகழ்ந்துபேசி எழுதினர்; இவர் கூற்றின் உண்மையை ஆராய்வோம்.

ன்பாடு

ஒருவர் கூறியபொருளில் தமக்கு உ இல்லையாயின் அதனை மட்டும் இசைந்த காரணங்களைக் கொண்டு விளக்கிப் போதல் நன்று; அதனை விடுத்து அப் பொருள் கூறினவரைப் பலவாறு இகழ்ந்து பேசுதல் அறிவுடை மைக்கு அழகாகுமா? தமிழ் கற்றாரும் சைவசிந்தாந்தம் உணர்ந்தாரும் வரவர அருகிப்போகும் இக்காலத்தில், அவை தெரிந்தாராயுள்ள சிற்சிலரையும் வசைகூறிக் கலாம்விளைத்தல் யாதுபயனைப் பெறுதற்கோ! ஆங்கில மொழியையே பயிலுதலால் இவ்வுலகத்திற்பெறும் பயன்களை யெல்லாம் மறுத்துத் தமிழை வருந்திக் கற்றதற்குப் பயன் இதுதானே? ஆ ங்கிலமொழி கற்றவர் தமக்குட் கருத்துவேறு பாடுகள் வந்தக்கால் அவரவர் தாந்தாம்கொண்ட கொள்கைகளை மட்டும் விளக்கிக் காட்டி வழக்கிடுகின்றனரே யல்லாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/235&oldid=1583986" இலிருந்து மீள்விக்கப்பட்டது