உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

211

தமிழரைப்போல் இங்ஙனம் ஒருவர்மேலொருவர் வசைகூறி வழக்கிடுதலைக் கண்டிலம். ஆங்கில நன்மக்களிடத் துள்ள உயர்ந்த தன்மைகளையும் உயர்ந்த செய்கை களையும் பின்பற்றாமல் அவரைப் பழித்துப்பேசிக் கொண்டே அவர்தம் ஊண் உடை உடைகளை மட்டும் விரும்பிக் கைக்கொண்டு உலாவும் நம் தமிழர் சிலர் கண்டது இவ்வளவு தானா? அதுநிற்க.

கூட

தமிழில் மந்திரங்கள் இல்லையெனவும், அதனால் ஞானோப தேசத்திற்கும் சிவபெருமானை அருச்சித்தற்கும் தமிழ் பயன்படா தெனவும் முன்னெருகால் தெய்வச்செந்த மிழை அளவுகடந்து பழித்துப்பேசியவர் இப்போது தமிழ் நூலாகிய திருவாசகத்திற்குப் பரிந்துபேச வந்ததும் அதனை மந்திரமொழி என்றதும் புதுமையாகவே காணப்படுகின்றன! திருவாசகத்தினும் மிக்க தெனவும், ஈசுரவாக்கியமெனவும் இவர் நினைக்கும் வேதங்களுக்குங் யாஸ்காச்சாரியர் சாயனாசாரியர் முதலியோர் உரைகள் எழுதியிருக்கையில் திருவாசகத்திற்குமட்டும் உரை யெழுதலாகாதென்று இவர் கூறுதல் என்னையோ! வேதங்களையும் திருவாசகத்தையும் பொருள் தெரியாமல் ஓதினும் வீடுபேறு கிடைக்கும் என்று கூறும் இவர் அங்ஙனம் பொருள் தெரியாமல் ஓதிவீடுபேற்றை அடைந்தவர் எத்தனை பெயரைக் கண்டனரோ! எல்லாத் துன்பங்கட்குங் காரணமான அறியாமையைத் தொலைத்து ஞானத்தாலன்றே வீடுபேற்றை அடையவேண்டுமென்று அறிவு நூல்கள் வற்புறுத்துரைக்கின்றன! இது

6

66

ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம் நல்ல ஆகமஞ்சொல்ல அல்லவா மென்னும்

ஊனத்தார் என்கடவர் அஞ்ஞானத்தால்

உறுவதுதான் பந்தம்'

99

என்று சிவஞான சித்தியாரினும் கூறப்பட்டமை காண்க அறிவு நூல்களின் பொருள்களை ஆராய்ந்து உணர உணர அறியாமை தேய, அறிவு விளங்கும். இவ்வுண்மை கற்றறிவில்லாரும் உணர்வர்; அங்ஙனமாகத் திருவாசகம் முதலான மெய்ந் நூல்களைப் பொருள் தெரியாமல் ஓதல்வேண்டுமெனவும், அதன் பொருளை விளக்குதல் குற்றமாமெனவும் கூறுவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/236&oldid=1583987" இலிருந்து மீள்விக்கப்பட்டது