உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

227

பொறாமை நீங்கினாரெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற்புராணங் கூறாநிற்கும். இறைவன் பாணபத்திரர்க்குப் பொற்பலகை யிடுவித்தமைக்கு ஏற்புடைக் காரணங்கள் உளவாகப், பெரியபுராணத்துள் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்குப் பலகை யிருவித்தமைக்கு அத்தகைய ஏற்புடைக்காரணங்கள் இலவாதலை ஒப்பவைத்து நோக்க வல்லார்க்குப், பாணபத்திரர்க்குப் பலகையிட்ட வரலாறே பொருத்த முடைத்தாமென்பதூஉம், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் குப் பலகையிட்டதாகச் சொல்லும் வரலாறு பொருத்தமின்றாய்ப் ‘பாணர்' என்னும் பெயரொற் றுமை பற்றிப் பாணபத்திரர்க்குரியதனை அவர்க்குப் பின்னிருந்த நீலகண்ட யாழ்ப்பாணர்க்கும் படைத்திட்டுக் கொண்டு சொல்லப் பட்டதா மென்பதூஉம் நன்குவிளங்கும். எனவே, திருஞான சம்பந்தப் பெருமான் ‘தார முய்த்தது பாணற் கருளொடே' எனவும், “பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனவும் இருகாற் குறிப்பிட்டது தங்காலத்திற்கு முன்னிருந்த பாணபத்திரையே யாமென்பது கடைப்பிடிக்க.

அற்றேல், பெரியபுராணத்துட் கழறிற்றறிவார் என்னுஞ் சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு கூறுகின்றுழிப்.பாண பத்திரர் இறைவன்றந்த திருமுகம் பெற்றுச் சேரமான் பெருமாளிடஞ் சென்றாரெனக் குறிக்கப்பட்டவா றென்னை யெனின்; பெரியபுராணத்துட் காணப்படும் இவ்வரலாறும் பொருத்தமின்றாம்; என்னை? திருஞான சம்பந்தப் பிள்ளை யார்க்கு முன்னிருந்த பாணபத்திரர் தமது காலத்திருந்த சிவனடியாரான ஒரு சேரமன்னரிடஞ் சென்றாராவதே பொருத்தமாவதன்றிப், பிள்ளையார்க்குப் பன்னெடுங்காலம் பின்னிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமானிடஞ் சென்றாராவது பொருந்தாமையான் என்க. மேலும், பெரிய புராணத்திற்கு முதனூலாகிய நம்பியாண்டார் நம்பி திருவந்தா தியிற் போந்த சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றிற் பாணபத்திரர் இறைவன் றந்த திருமுகங்கொண்டு அவர்பாற் சென்றமை சொல்லப்படாமையானும், அதற்கு வழிநூலாய்ப் பின்வந்த பெரியபுராண வரலாறு பழைய உண்மை வரலாறு களோடு பெரிது முரணுதலானும் பெரிய புராணத்திற் சொல்லப் பட்ட அது கொள்ளற்பாலதன்றென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/252&oldid=1584008" இலிருந்து மீள்விக்கப்பட்டது