உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் 16

அற்றேற், பெரும் பற்றப்புலியூர் நம்பி திருமுகங் கொடுத்த திருவிளையாடல் ஏழாஞ் செய்யுளில் "நிலத்துயிர் கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும் அன்புடைச் சேரமான் காண்” என்று கூறியிருத்தல் என்னை? சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமானுக்கே 'கழறிற்றறிவார்’ எனும் பெயர் உரியதாதல் “கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையுள் அருளிச் செய்யு மாற்றாற் பெறப்படுகின்றதா லெனின்; பெரும்பற்றப்புலியூர் நம்பி தாங்கூறிய கடவுள் வாழ்த்தில்; 'மாலை, முடிகொள் சுந்தரர்தாள் போற்றி' என்று வணக்கங் கூறியிருத்தலின், அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்ட காலத்தே இருந்தா ரென்பது நன்கு பெறப்படும். அங்ஙனம் பிற்பட்ட காலத்திருந்த அவர் பாணபத்திரர் காலத்தவரான சேரமானை எடுத்துக் கூறுகின்றுழி அவ் வரசனும் சுந்தரமூர்த்தி தோழரான சேரமான் பெருமாளும் ஒருவரே போலுமெனச் சிறிது மயங்கியே திருத்தொண்டத் தொகையுட் போந்த ‘கழறிற்ற றிவார்' என்னும் பெயரை எடுத்துக் ‘கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும்' என அங்ஙனம் வினைப்படுத் தோதினார்.

அங்ஙனம் ஓதினும், தமக்கு முன்னிருந்த நூல்களில் அவ்விரண்டு சேர மன்னரையும் ஒருவராக்குதற்குப் போதிய சான்று காணாமையின் ஐயுற்றுத் திருத்தொண்டத் தொகையிற் போலக் ‘கழறிற்றறிவார்' என்பதனை அம் மன்னர்க்குப் பெயராக உரையாது “கழறுஞ் சொற்கள்" அனைத்தையும் அறிந்திரங்கும் அன்புடைச் சேரமான் காண்' என அச் சொற்றொடரை வினைப்படுத்துச் 'சேரமான்’ என்னும் பெயர்க்கு அடைமொழி யாக்கினார். இவ்வாறு பெரும்பற்றப் புலியூர் நம்பியார் அச் சொற்றொடரைப் பெயராக வுரையாது, ஒரு பெயர்க்கு அடைமொழி யாக்கிக் கூறுதலானும், பாணபத்திரர் காலத்திருந்த சேரமான் சுந்தரமூர்த்திக்கட்குத் தோழராய் அவரோடு கைலாயத்திற்கு உடன் சென்ற சேரமான் பெருமாளேயாயின் அச் சிறப்பினை அவர் கூறாது விடாராக லானும் இவ்வடைமொழித் தொடரின்கண் வந்த இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/253&oldid=1584009" இலிருந்து மீள்விக்கப்பட்டது