உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் 16

காண்டற்குக் கல்லாடநூல் ஒரு பெருங் கருவியா யிருத்தலின், அது பெரிய புராணத்திற்கும் சுந்தரமூர்த்திகள் திருஞான சம்பந்தர் அப்பர் என்னும் மூவர் காலத்திற்கும் மேற்பட்ட தென்பதனை விளக்கிக் காட்டுகவெனின்; அது மேலே காட்டினாமாயினும் இன்னும் சிறிது காட்டுதும். அக் கல்லாட நூல் ‘நரியைக் குதிரை யாக்கியதனை' 44-வது செய்யுளினும், "பாணபத்திரர் பொருட்டு விறகுதலையனாய்ச் சென்று இசை பாடினதனை” 45-வது செய்யுளினும், 'வையை யடைக்க மண் சுமந்ததனை' 49-வது செய்யுளினும், 'மூர்த்தி நாயனார் முழங்கை தேய்த்த திருத்தொண்டினை 57-வது செய்யுளினும், 'சாக்கிய நாயனார் திருத்தொண்டினை 68-வது செய்யுளினும், 'இடைக்காடன் பிணக்குத் தீர்த்தனையும்' 'காரைக்காலம் மையார் திருவாலங் காட்டிற் றிருநடங் கண்டதனையும்' 78-வது செய்யுளினும், காரைக்காலம்மை பெற்றமையினை’ 101-வது செய்யுளினும், இவற்றினும் பழைய திருவிளையாடல்கள் பலவற்றை இடையிடையே பல செய்யுட் களினும் அன்பால் என்பு நெருக்குருக எடுத்தோதியவாறு போலச், சிவ பெருமான் திருவருள் பெற்றோரிற் றலைசிறந்து நிற்கும் அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான ஏனைமூவரை ஒரு சிறிதுங் குறிப்பிடாமையால், அக் கல்லாட நூல் அம் மூவர்க்கும் முற்பட்ட தென்பது நன்கு பெறப்படும். அந் நூலாசிரியர் சிவபெருமானிடத்தும், அவனடியாரிடத்தும் பேரன்புடையராகக் காணப்படுதலால், அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தனராயின் அவர் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு சிறிதாயினுங் கூறாது விடார்.

மாங்கனியால்

வீடு

மற்று அம் மூவரைப் பற்றிய குறிப்புச் சிறிதுங் கூறாமை காண்டே அவர் அவர்க்கு முன்னிருந்தாரென்பது ஒரு தலையாகத் துணியப்படும் என்க. அங்ஙனமாயின், ‘திருஞான சம்பந்தப் பெருமான் வெப்பு நோய் தீர்த்தமை' அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் ஒன்றாய் இருந்தலானும், கல்லாடத்துள் ‘எட்டெட்டியற்றிய கட்டமர் சடையோன்' என அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் குறிப்பிடப் பட்டிருத்தலானும் அந்நூல் திருஞான சம்பந்தர்க்கும் பிற்பட்டதாதல் பெறப்படுமாலோ வெனின்; மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்திற் குறிப்பிடப்பட்ட பல திருவிளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/255&oldid=1584011" இலிருந்து மீள்விக்கப்பட்டது