உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

231

யாடல்கள் பெரும்பற்றப் புலியூர் நம்பியார் திருவிளையாடற் புராணத்தினும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினுங் காணப்படாமை யானும், இவ்விரு புராணங் களிற் காணப் பட்டனவும் ஒன்றிலுள்ளவாறு பிறிதொன்றிற் காணப் படாமல் ஒன்றில் ஒருவாறாயும் பிறிதொன்றிற் பிறிதொரு வாறாயும் இருப்பக் காண்டலானும், இறைவனே இயற்றிய திருவிளையாடல்களினிடையே திருஞானசம்பந்தப் பெருமானியற்றிய அற்புதங்களையுங் கோத்தற்கு ஓரியைபு இன்மை யானும் கல்லாடத்துட் குறிப்பிடப்பட்ட பழைய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்கனுள் திருஞான சம்பந்தப் பெருமான் அவற்றிற்ப் பிற்காலத்தே நிகழ்த்திய அற்புதங்கள் சேர்ந்தில வென்பது தேற்றமாமென்க.

என்றிதுகாறும் ஆராய்ந்து கூறியதுகொண்டு, பாண பத்திரரும் அவர் திருமுகங் கொண்டு சென்ற சேரமானும், திருஞான சம்பந்தப் பெருமானுக்கும் அவர்க்கும் முன்னிருந்த திருவாதவூரடிகட்கும் முற்பட்டவரா மென்பது இனிது பெறப்பட்டமையால், ‘அன்னதொன் றவ்வயின் அறிந்தோன்’ என்பதில் இறைவன் பாணபத்திரர் பொருட்டு இசைபாடின் திருவிளையாடல் குறிப்பிடப் பட்டதென யாங் கூறியவுரை பொருத்தமுற்று நிலைபெறுதல் காண்க.

1.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

அடிக்குறிப்பு

-திருக்குறள்

திருப்பெருந்துறைக்குங் கடலுக்கும் இடையிலுள்ள நில அளவினைத் திருப்பெருந்துறைக் கோயில் தருமகர்த்தாவான ஸ்ரீமத் சுந்தரலிங்கத் தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீமான் மகாலிங்கம் அவர்கள் வழியாகத் தெரிவித்தமைக்கு அவர்கள்பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக் கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/256&oldid=1584012" இலிருந்து மீள்விக்கப்பட்டது