உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

3. வேதம் மக்கள் வாய்மொழியே என்பது

"வேதமொழியர் வெண்ணீற்றர்" "வேதமொடாகமம் மெய்யாம் இறைவனூல்” “வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூல் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதி நூலநாதி யமலன்றரு நூலிரண்டும்” என்னும் திருமொழிகளை நண்பர் சிலர் எடுத்துக்காட்டி, இப்போது வடமொழியிற் காணப்படும் வேதாகமங்கள் இறைவன் வாய்மொழி ஆக மாட்டா என்று யாம் திருவாசக விரிவுரையின் அகத்தே விளக்கிய பகுதியை மறுத் துரைப்பதோடு, அவ் விரண்டு நூல்களும் இறைவன் அருளியன ஆகா என்று யாம் கூறுவது பெரிய தொரு குற்றமாம் என்றும் கூறுகின்றார்கள்.

வேத ஆகமப்பெயரால் இப்போது வடமொழியில் வழங்கும் நூல்களே யாம் நன்கு ஆராயாதகாலத்தே யாமும் அவற்றை இறைவன் வாய்மொழிகளென்றே நம்பிவந்தேம். பின்னர் அவற்றை எம்மால் இயன்றமட்டும் ஆராய்ந்து பார்த்தபின் அவை பண்டைநாளிலிருந்த அறிவுடையோரால் ஆக்கப்பட்டனவே யல்லாமல் இறைவன் வாய்மொழியாதல் ஒருவாற்றானும் ஏலாதென உணர்ந்தேம். உணரவே, எமதாராய்ச்சிக்குப் புலப்பட்டபடி அவை இறைவன் நூல் ஆகா என்பதற்குரிய காரணங்களையும் எடுத்துக் காட்டினேம். யாம் கூறியது பொருந்தாதாயின் யாம் எடுத்துக் காட்டிய காரணங்களை மறுத்து அவையிரண்டும் இறைவன் நூலேஆம் என்பதற்கு இசைந்த காரணங்களை இனிதுவிளக்கி எழுதுதலே அறிவுடையோர்க்கு முறையாகும். அவ்வாறு செய்தலைவிடுத்து வீணே எம்மை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்கு நன்றாகாது.

னி, வேதங்கள் எழுதப்பட்ட காலத்திற்குப் பன்னெடுங் காலம் பிற்பட்டு வந்த சான்றோர்கள் அவை இறைவன் வாய் மொழிகள் என்று கூறியதன் கருத்து யாதாயிருக்கலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/257&oldid=1584014" இலிருந்து மீள்விக்கப்பட்டது