உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

233

என்பதனைப் பின்னே ஆராய்வாம். மற்று அவ் வேதங்கள் தம்முள்ளும், அவ் வேதங்கள் எழுதப்பட்ட காலத்துக்குச் சிறிது பின்னே வழங்கிய நூலுள்ளும் அவை இறைவன் வாய் மொழியே யென நாட்டுதற்கு ஏதேனுங் காரணம் உண்டா வெனச் சிறிது ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். என்னை? ஒரு ருபொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து கைக் கொள்ளுதலினும் சிறந்த செயல் பிறிது இன்மையி னென்பது. ருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களில் இருக்கு வேதம் ஒன்றே எல்லாவற்றினும் பழமையானதும், ஏனை மூன்றற்கும் தாயகமாவதும்ஆம். ஏனை மூன்று வேதங்களில் உள்ள மந்திரங்களிற் பெரும்பாலன இருக்குமா மறையினின்றும் எடுத்துக் கொள்ளப்பட்டன வேயாகும். ஆதலால் இருக்கு வேதத்தின் உண்மையை ஆராயவே ஏனைவேதங்களின் உண்மை தானே விளங்கும். இருக்குவேதம் பத்துமண்டிலங்களாக வகுக்கப்பட்டுள்ளது.

இப் பத்து மண்டிலங்களினும் உள்ளவை ஆயிரத்துப் பதினேழு சூக்தங்கள் ஆகும். ஒரு சூக்தம் என்பது பல செய்யுட் களின் தொகுதி. வாலகில்லிய முனிவரால் எழுதி எட்டாம் மண்டிலத்தின் நடுவிற் சேர்க்கப்பட்டுள்ள பதி னாரு சூக்தங்களையுஞ் சேர்த்தால் இவ்விருக்கு வேதத்தின்கண் உள்ளவை மொத்தம் ஆயிரத்து இருபத்தெட்டுச் சூக்தங் களாகும். இச் சூக்தங்கள் இருடிகளாலும் இருடிகளைத் தலைவராய்க்கொண்ட அவ்வக்குடும்பத்திலுள்ள பலராலும் பாடப்பட்டனவாகும். இதன் முதன் மண்டிலத்தின் கண் உள்ள நூற்றுத்தொண்ணூற்றெரு சூக்தங்களும் மதுச் சந்தஸ், ஜேதர், மேதாதிதி, சுனச்சேபர், ஹிரண்யஸ்தூபர், கண்வர், ப்ரஸ் கண்வர், சவ்யர், நோதஸ், பராசரர், கோதமர், குத்ஸர், காஸ்யபர், ரிஜ்ராஸ்வர், திரித ஆப்த்யர், கக்ஷிவான், பாவ யவ்யர், ரோமசர், பருச்சேபர், தீர்க்கதமஸ், அகஸ்தியர், இந்திர அகஸ்தியர், லோபாமுத்ர அகஸ்தியர் முதலான இருடியர் களாற் பாடப்பட்டனவாகும். இங்ஙனமே ஏனை ஒன்பது மண்டிலங்களில் உள்ள சூக்தங்களையும் இயற்றின இருடியர் களின் பெயர்களை எடுத்துரைக்கப்புகின் இது மிக விரியு மாதலால், அவ்வம்மண்டிலங்களிற் பெரும்பான்மையான சூக்தங்களை இயற்றிய இருடியர்களின் பெயர்மட்டுமே D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/258&oldid=1584015" இலிருந்து மீள்விக்கப்பட்டது