உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

6. சேக்கிழாரும் பெரியபுராணமும்

வரா

‘பாணபத்திரரும் சேரனும்' என்று தலைப் பெயரிட்டு யாம் ஆராய்ந்தெழுதிய பொருட் பகுதியில், பாணபத்திரர் இறைவன் தந்த திருமுகங் கொண்டு சென்றது சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரிடத்து அன்றென்பதூஉம், அதனால் அங்ஙனஞ் சென்றதாகக் கூறும் பெரிய புராணவுரை கொள்ளற்பாலதன் றென்பதூஉம், பாணபத்திரரும் அவர் தாம் திருமுகங் கொண்டு சென்ற சேரமன்னனும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் மிக முற்பட்ட மென்பதூஉம் ‘கல்லாடம்' முதலான பழைய பல நூலாராய்ச்சி கொண்டு தெற்றென விளக்கினேம். இவ் வாராய்ச்சியில் சேக்கிழாரைப் பற்றிப் பெயரளவாய்க்கூட யாம் ஏதும் எடுத்து மொழிந்திலேம். அங்ஙனமாகவும், யாம் சேக்கிழாரை இகழ்ந்து பேசினேமென்று வருந்திச் சிலர் தமக்கெழுதுவதாக எமது திருவாசக விரிவுரையினை வெளியிடுவோர் எமக்குத் தெரிவித்தனர். ஆனால், நேரே எமக்கு வேறெவரும் அங்ஙனம் எழுதிற்றிலர். அஃதெங்ஙனமாயினும் ஆகுக. யாம் ஆராய்ந் தெழுதிய அப் பகுதியிற் சேக்கிழாரடிகளைப் பற்றி யாம் ஏதுமே கூறிற்றிலம் என்பதை அன்பர்கள் உற்று நோக்குதல் வேண்டும். அஃதுண்மையேயாயினும், 'பெரியபுராண வரலாறு பொருந் தாது' என்றமையால், அது சேக்கிழாரை இகழ்ந்ததாய் முடியா தோவெனின்; முடியாது; பிற்காலத்துவந்த வெள்ளியம்பலத் தம்பிரான் என்பார் தாம் பல செய்யுட்களெழுதி அவைதம்மைப் பெரிய புராணத் திடையிடையே செருகினாரெனவும், அவ்வாறு செருகியவற்றுள் தெரிந்தெடுக்கப்பட்ட செய்யுட்களே, 'வெள்ளிப்பாடல்' எனப் பெயர் பெற்றன வெனவுங் கற்றார் பலர் கூறுதலே உற்று ஆராயுங்காற், சேக்கிழார் காலத்திற்குப் பின்னே வந்தார் பலர் தாந்தாம் விரும்பிய செய்யுட்களை எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/286&oldid=1584047" இலிருந்து மீள்விக்கப்பட்டது