உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 16

அதன் முன்னும் பின்னும் நடுவும் செருகிவிட்டாரென்பது புலனாக நிற்கும். இதற்கொரு சான்று

காட்டுதும்.

சுந்தரமூர்த்தி

ங்கெடுத்துக்

நாயனார் அருளிச்செய்த ‘திருத் தொண்டத் தொகை'யை அடியாகக் கொண்டு அதன்கட் கூறப்பட்ட திருத்தொண்டர் வரலாறுகளை விரித்துக் கூறுதலே ஆசிரியர் சேக்கிழார் கருத்து. இனி இவ்வாறு கூறுதற்குமுன், அத் திருத்தொண்டத் தொகை வந்தவாறு கூறவேண்டுதலின் அதன் பொருட்டுச் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாறு உரைத்தற்குக் கருதி அதனைத் ‘தடுத்தாட் கொண்ட புராணத்தி' னின்று துவங்கி அதனைத் 'திருத்தொண்டத் தாகை' அருளிச்செய்த இடம் வரையிற் றொடர்ந்து சொல்லிப், பின்னர் அங்கு நின்று திருத்தொண்டர் வரலாறு களை அப் பதிகத்திற் சொல்லிய அடைவே சொல்லிக் கொண்டு போங்கால், முதலிற் றுவங்கிய சுந்தரமூர்த்தி நாயனார் புராணமும் முற்றக் கூறவேண்டுதலின், அதனைக் கூறுதற்கு இயைபுடைய ‘ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்’ தும் 'சேரமான் பெருமாள் நாயனார் புராணத்’தும் இடையிடையே கூறிச் சென்று, பின்னர்த் திருத்தொண்டர் வரலாறுகளெல்லாங் கூறி முடித்தபின், சுந்தரமூர்த்தி நாயனார் புராணமுங் கூறி கூறி முடிக்க வேண்டுதலின் அதனை வெள்ளானைச் சருக்கத்திலே முற்றக் கூறி முடிய வைத்தார் பெரியபுராணம் முற்றும் ஒருவகையால் நோக்குமித்துச் சுந்தரமூர்த்தி நாயனார் புராணமாகவே முடிய, ஏனை நாயன்மார் வரலாறுக ளெல்லாம் அதன்கண் இயைபுபற்றி இடைவந்தனவாகவே கொள்ளப்படும்.

இனி, இங்ஙனம் விரித்துப் பாடப்படுவதாகிய சுந்தர மூர்த்தி நாயனார் புராணம் ‘கங்கையும் மதியும் பாம்புங் கடுக்கையும் முடிமேல் வைத்த' என்னுஞ் செய்யுளை முதலாகக் கொண்டு துவங்கா நிற்கின்றது. இதுதான் நூலின் துவக்கம். இனி, ஒரு நூலுக்கு இன்றியமையாச் சிறப்பினது ‘பாயிரம்’ என்று சிரியர் நக்கீரனார் கூறினமையாயினும், “ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிர மில்லது பனுவலன்றே” என்று பிறருங் கூறுதலானும், சேக்கிழார் அடிகளுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/287&oldid=1584048" இலிருந்து மீள்விக்கப்பட்டது