உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

263

தாமியற்றும் இத் திருத்தொண்டர் புராணத்திற்குப் பாயிரம் உரைப்பான் புகுந்து "தெய்வ வணக்கமுஞ் 6 வணக்கமுஞ் செயப்படு பொருளும், எய்த வுரைப்பது தற்சிறப்பாகும்" என்னுஞ் சூத்திரமே பற்றி “உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னுஞ் செய்யுண் முதல் “மதிவளர் சடைமுடி” என்ப தீறாகத் தெய்வவணக்கங் கூறி, “அளவிலாத பெருமையராகிய” என்னுஞ் செய்யுண் முதல் "இங்கிதன் நாமங் கூறின்” என்ப தீறாகத் தன்னாற் சயப்படு பொருளும், அதனோடியைத்து அவையடக்கமுங் கூறியருளினார். இவ்வாறு பாயிரங் கூறி முடித்தபின், உடனே தொடங்கற்பாலது “கங்கையும் மதியும் பாம்பும்” என்னுஞ் செய்யுளை முதலாகவுடைய நூலேயாதல் வேண்டும். அவ்வாறிருக்கப், பாயிரத்திற்கும் நூலுக்கும்

யே திருமலைச் சிறப்பு' 'திருநாட்டுச் சிறப்பு' திருவாரூர்ச் சிறப்பு' 'திருக்கூட்டச் சிறப்பு என வேறு நான்கு பகுதிகள் நூலுக்குச் சிறிதும் இயைபின்றிக் காணப்படுகின்றன.

அற்றன்று, 'திருமலைச் சிறப்பின்கட் சுந்தரமூர்த்தி நாயனார் பண்டைப் பிறவி வரலாறு கூறப்படுதலின், அது நூலுக்கு இயைபுடைத்தே யாமெனின்; ஆசிரியர் சேக்கிழார் அவ்வாறு அவரது பழம் பிறப்பு வரலாறு கூறல் வேண்டின ராயின் ‘தடுத்தாட்கொண்ட புராணத்தின்' முதலிலேயே அது கூறவமையும்; என்னை? “தீ தகன்றுலகம் உய்யத் திருவவதாரஞ் செய்தார்" என்று சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தருளினமை கூறும் அவ்விடமே அதற்குப் பெரிதும் பொருத்த முடைத் தாகலின் என்பது.

66

அதனை விட்டுத் தனியே ‘திருமலைச் சிறப்பு' என ஒன்று வகுத்துக்கொண்டு அதன்கண் அதனைக் கூறினா ரென்றல் சிறிதும் பொருந்தாது. அற்றேல், 'திருமலைச் சிறப்பு' என்னும் அப் பகுதி அதன்கண் எவ்வாறு வந்ததெனிற், ‘பெரிய புராணம்’ மிகச் சிறந்ததொரு தமிழ் நூலாய் இருத்தல் கண்டு மனம் புழுங்கிய வடமொழி வல்லார் எவரோ ஒருவர் அதிற் சொல்லப்படும் அடியார் வரலாறுகளெல்லாம் முற்றொட்டே வட மொழிக்கண் உபமந்நியு முனிவராற் சொல்லப்பட்டன

6

வாகப் புனைந்து கட்டிச் சொல்லித் தமது மனக் குறையைத்

தீர்த்துக் கோடற் பொருட்டுத் ‘திருமலைச் சிறப்பு' என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/288&oldid=1584049" இலிருந்து மீள்விக்கப்பட்டது