உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் 16

அப் படலத்தைத் தாமாக எழுதியோ அல்லது தமிழறிந்தார் ஒருவரைக் கொண்டு எழுதுவித்தோ பெரிய புராணத்தின்கட் சேர்த்து விட்டாரென் றுணர்ந்துகொள்க. அதனானன்றே இப் படலத்துச் செய்யுட்களின் சொன்னடையும் பொருளமைப்புக் களும் ஆசிரியர் சேக்கிழார் செய்யுணடை பொருளமைப்புக்க ளோடு பெரிதும் மாறுபட்டுச் சுவை குறைந்தனவா யிருக்கின்றன. இவ்வாற்றல் ‘திருமலைச் சிறப்பு' என்னும் படலம் சேக்கிழார் அருளிச் செய்ததன்றென்பது துணியப்படும்.

இனி, அதனை யடுத்துள்ள ‘திரு நாட்டுச் சிறப்பு' என்னும் படலமும் ஆசிரியர் சேக்கிழார் செய்த தன்றென்பது காட்டுவாம். ஒவ்வொரு திருத்தொண்டர் புராணத்தின் தொடக்கத்திலும் அவ்வவரிருந்த நாடு நகரங்களின் வளங் களைக் கூறிச் செல்லும் ஆசிரியர் ஓரியைபுமின்றி இப் படலத்தின் கண்ணும் அவ் வளங்களையே கூறினாரென்றல் 'மிகைபடக் கூறுதல்' என்னுங் குற்றத்திற் கிடனாம். அற்றன்று, நம்பியாரூரர்க்குப் பரவையாரை மணஞ் செய்வித்து இறைவன் அருள்புரிந்த திருவாரூர் என்னும் நகரத்தின் சிறப்பை இதனை யடுத்துக் கூறுகின்றாராகலின், அந்நகரினையுடைய சோழ நாட்டுச் சிறப்பை இப் படலத்தின்கட் கூறுதல் பொருத்தமே யாமெனிற், பரவையாரைப் போலவே சங்கிலியாரை மணஞ் செய்வித்த திருவொற்றியூர் என்னுந் திருநகர் தொண்டை நாட்டின் கண்ணே உள்ளதாகலின் அதன் வளங்களையுங் கூறாது, சோழ நாட்டை மட்டுஞ் சிறந்தெடுத்துக் கூறுதல் யாங்ஙனமென வினாவுவார்க்கு இறுக்க லாகாமையின் அது பொருத்தமாதல் யாண்டைய தென்க. அல்லதூஉம், திருத்தொண்டர் புராணத் திற் சொல்லப்படும் அடியார்களெல்லாம் தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டி நாடு, மலை நாடு, கொங்கு நாடு முதலிய எல்லாவற்றினும் உளராகலின் அவற்றை எல்லாங் கூறாது சோழ நாட்டுக்கு மட்டுந் தனிச் சிறப்புரைத்தல் சேக்கிழார் திருவுள்ளக் கிடையாகா தென்க. ஓரியைபுமின்றி நாட்டுப் படலம் நகரப் படலங் கட்டிச் சொல்லுதலிலேயே மகிழ்ச்சி மீக் கூர்ந்து நிற்கும் பின்றைக் காலத்துப் புலவ ரெவரோ இப் படலத்தைச் சேக்கிழார் பெயராற் புனைந்து கட்டி இதன்கட் சேர்த்துவிட்டா ரென்க. ஆசிரியர் சேக்கிழார் அருளிய செய்யுட் சொற்சுவையும் அவர் கூறும் இயற்கைப் பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/289&oldid=1584050" இலிருந்து மீள்விக்கப்பட்டது