உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

265

சுவையும் இப் படலத்தின்கட் காணப் படாமையும், இதன்கட் காணப்படுவன பல இயற்கைக்கு மாறாதலும் உய்த்துணர மாட்டுவார்க்கு இது சேக்கிழார் அருளிச் செய்த தன்றென்பது தெள்ளிதிற் புலனாம்.

இனித், 'திருவாரூர்ச் சிறப்பு' என்னும் படலமும் மேற்கூறியவாற்றாற் சேக்கிழார் செய்ததன்றென்பது தானே பெறப்படும். அற்றன்று, சுந்தரமூர்த்திநாயனார் பரவைநாச்சி யாரை மணங்கூடிப் பெரும்பாலும் வாழ்ந்த இடம் திருவாரூரே யாகலானும், அந்நகரின் கண் உள்ள திருக்கோயிலிற் றேவா சிரியன் என்னுந் திருக்காவணத்துக்கூடிய அடியார்கூட்டத்தாற் பழவடியார்மாட்டு அன்பு மீதூரப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் ஆண்டிருந்தே 'திருத்தொண்டத் தொகை அருளிச்செய்தன ராகலானும் அந்நகர்ச் சிறப்பைக் கூறுதல் இயைபேயா மெனின், நன்று சொன்னாய், 'தடுத்தாட்கொண்ட புராணத்' திலேயே திருவாரூர்ச் சிறப்பும், அதன்கணுள்ள திருக்கோயிலிற்றேவாசிரியனென்னுந் திருக் காவனத்துக் கூடிய திருத்தொண்டர் தம் திருக்கூட்டச் சிறப்பும் ஆசிரியர் சேக்கிழார் நன்கெடுத்துக் கூறுகின்றராகலின், மறித்தும் அவை தம்மையே 'திருவாரூர்ச்சிறப்பு' எனவும் 'திருக்கூட்டச் சிறப்பு' எனவும் அது வேறிருபடலங்களாக்கி ஈண்டு வாளாகூறுதல் ‘கூறியது கூறல்’ ‘மிகைபடக்கூறல்' என்னுங் குற்றங்கட் கிடனாமென்க. அது வேயுமன்றித், 'திருத் தொண்டத்தொகை'யிற் காணப்படாத "மநுநீதிகண்ட சோழர்' 'வரலாற்றினை இதன்கட் கூறுதலும் மற்றொன்று விரித்தல்' என்னுங் குற்றமாய் முடியும். இக் குற்றங்கட் கிடனாகத் 'திருவாரூர்ச் சிறப்பு' என்னும் இப்படலத் தையும், இதனையடுத்துள்ள திருக்கூட்டச்சிறப்பையும்' ஆசிரியர் சேக்கிழார் இயற்றினாரென்று புகலுதல் ஆகாமையில், இவையும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவென்பது தேற்றமாமென்க.

ச்

இங்ஙனமே, திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தா மணியில் அவர்க்குப் பிற்காலத்தவரான கந்தியாரென்பவர் பல செய்யுட்களை எழுதி அதனிடையிடையே செருகிவிட்டன ரென்று நச்சினார்க்கினியார் கூறினார். திருமூலநாயனார் அருளிச்செய்த மூவலயிரஞ்செய்யுட்களுக்கு மேலும் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/290&oldid=1584051" இலிருந்து மீள்விக்கப்பட்டது