உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் 16

செய்யுட்களைப் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்து விட்டன ரென்பதைத் ‘திருவாசகவிரிவுரை' யுள்ளும் விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். ஆகவே, பாணபத்திரர் வரலாற்றை அவர்க்குப் பிற்காலத்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் மேலேற்றியும், இறைவன் பாணபத்திரர் வழி விடுத்த திருமுகம்பெற்ற சேரமன்னன் முற்பட்ட காலத்தவனாயிருக்க அவனுக்குப் பிற்காலத்தவரான சேரமான்பெருமாளே யெனத் திரிபு படுத்தியுங் கூறும் பிழைப் பகுதிகள் ஆசிரியர் சேக்கிழார் செய்தனவாதல் பொருந்தாமையின், அவை பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவென்பது திண்ணமே யாம். அதனால் யாம் ஆசிரியர் சேக்கிழாரைச் சிறிதும் இகழ்ந்திலேமென்று ஆராய்ந்துணர்ந்து கொள்க.

பல

யாம் எழுதிய திருவாசக விரிவுரையில் ஆங்காங்குச் சிற்சிலர் நிகழ்த்திய தடைகளுக்கு விடைகளாக எழுதி அவ்விரிவுரை யிதழின் புறவேட்டில் வெளியிட்ட பொருட்பகுதிகளுள், மேற்காட்டிய தலைப்பின்கீழ் வந்ததும் ஒன்று. பெரிய புராணமென்னுந் திருத்தொண்டர் புராணத் தின்கட் காணப்படும் அடியார் வரலாறுகளிற் சில வற்றை யாம் நடுநின்று ஆராய்ந்து, அவற்றுட் பொருத்த மில்லனவாகப் புலப்பட்ட சிலவற்றை, உலகம் மெய்ம்மை யறியும்பொருட்டு, யாம் எடுத்தெழுதியக்கால் அதுகண்டு, முன் நூல்களில் எவற்றைக் காணினும் ஆராய்ந்து பாராது மெய்யென நம்பி உண்மையறிவுவளர்ச்சிக்குத் தடையாய் நிற்கும் பொய்ப்பற்று டைய சைவரில் ஒரு சாரார், யாம் சேக்கிழாரை இகழ்ந்து விட்டேமென ஒரு பொய்யுரை படைத்துச் சொல்லிப், பகுத்துணரமாட்டாப் பேதை மக்கள் எம்மை அருவருத்து

இகழுமாறு தூண்டிவிட்டார்.

நடுநிலை பிறழாது நின்று யாம் ஆய்ந்துகண்ட உண்மைகளை உள்ள படியே உலகிற்கு அறிவிக்குங் கடப்பாடு உடையமாதலால், அவரது ஆரவாரங்கண்டு அஞ்சாது, யாம் ஆசிரியர் சேக்கிழாரை இகழ்ந்திலாமையும், அவரருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்திற் காணப்படும் பிழைவரலாறுகள் அவர்க்குப் பிற்காலத்திருந்த பிறரால் எழுதிச் சேர்க்கப் பட்டமையுங் காட்டுகின் றுழி, “உலகெலா” மெனத் துவங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/291&oldid=1584052" இலிருந்து மீள்விக்கப்பட்டது