உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

267

நூற்பாயிரச் செய்யுட்கள் பத்திற்கும், "கங்கையும் மதியும் பாம்பும்" எனத்துவங்குந் தடுத்தாட்கொண்ட புராணத்திற்கும் இடையிலுள்ள 'திருமலைச் சிறப்பு’, ‘திருநாட்டுச்சிறப்பு’, ‘மநுநீதிகண்ட புராணம்', ‘திருக்கூட்டச்சிறப்பு' என்னும் நான்கும் ஆசிரியர் சேக்கிழார் செய்தனவாகா எனவும், அவை அவர்க்குப் பிற்பட்டாராலே எழுதிச் சேர்க்கப்பட்டனவா மெனவும் ஆராய்ந்துரைத்தேம். அதுகண்ட ஒருவர் யாம் அங்ஙனம் உரைத்தது பொருந்தாதெனக் கொண்டு, அதற்குத் தாம் ஆராய்ந்த சான்றுகள் காட்டி ஒரு சிறு புத்தகம் சில திங்களுக்கு முன் வெளியிட்டார்.

அவர் பெரும்பாலும் எம்மை இகழாது, யாம் எழுதியவற்றை மட்டும் ஆராய்ந்து எழுதினமையால், அவர் ஆராய்ந்துரைத்தவைகளை, யாம் பின்னும் ஆராய்ந்து ஈண்டுரைக்கப் புகுந்தேம். யாம் ஆராய்ந்து உரைத்தவைகளை உண்மைச் சான்றுகளால் தாமும் ஆய்ந்து பார்த்து மாறாமல், தமக்கு வந்தவா றெல்லாம் வீணே எம்மைப் புறம்பழித் தழுதுவார் பழிப்புரைகளை ஒருபொருட்டாக்கி அவற்றிற் கெல்லாம் மாறு கூறுவாமல்லம். எம்மை வாளா வாளா இகழ்ந் தெழுதினார் பலருள் ஞானசம்பந்த பராசக்தி' என்னும் புனைவுபெயருள் மறைந்து நின்றாரும் ஒருவர். நடுநிலை வழாது ஆராய்ந்தெழுதுவார் சொற்களையன்றி ஏனைப் புறங் கூற்றுரைகளை அறிவான் மிக்க சான்றோர் கருதாராகலின், அவ்வளவில் அவன் மகிழுக' என்னும் நயமேபற்றிப், புறங்கூறு நரை அவர் தம் புறங்கூற்றுரையில் மகிழவிடுத்து, மேலெடுத்துக் காட்டிய பெரிய புராணப் பகுதிகள் பற்றி யாங் கூறியவற்றை மறுத்தார்தம் ஆராய்ச்சியுரைகளை யாம் ஆராய்ந்து பார்ப்பாம்.

ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்படாமல், அவர்க்குப் பின் வந்தாராற்செய்து சேர்க்கப்பட்ட செய்யுட்கள் பெரிய புராணத்தின் கண் உளவென்பது எமக்கும் எம்மை மறுக்கப் புகுந்தார்க்கும் உடன்பாடேயாம். ஆனாற், சேக்கிழார் புராணம் பாடிய உமாபதி சிவனார்க்குப் பிறகுதான் பெரியபுராணத்தின் கண்

33 செய்யுட்கள் மிகுதியாகச் சேர்க்கப்பட்டிருக் கின்றனவே யல்லாமல் அவராற் தொகை குறிக்கப்பட்டுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/292&oldid=1584053" இலிருந்து மீள்விக்கப்பட்டது