உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் 16

நாலாயிரத் திரு நூற்றைம்பத்துமூன்று செய்யுட்களில் ஆசிரியர் சேக்கிழார் தம்மாலன்றிப் பிறரால் அவர் காலத்திற்கு முற்செய்து சேர்க்கப்பட்டன சிறிதுமில்லை யென்பதே நமதுரையை ஆராய்ந்த அவர் தங் கருத்தாம். அவர் அதற்குக் காட்டுஞ் சான்று என்னையெனின்; உமாபதி சிவனார்க்கு முற்பட்ட காலத்தே கற்றறிந்தாரும் சைவப் பெரியாரும் பல்கியிருந்தமை யிற், பிறராற் செய்யப்பட்ட செய்யுட்களை அந்நூலின்கண் இடையிடையே சேர்க்க அவரெல்லாம் ஒருப்பட்டிரார் என்பதூஉம், அங்ஙனம் சேர்க்கப்பட்டிருப் பின் உமாபதி சிவனார் அதனை எடுத்துக் கூறியிருப்பர் என்பதூஉம்

யாம்.

கு

இடைப்பட்ட காலத்தெழுந்த தமிழ் நூல்கள் சிலவற்றை ஆராய்வார்க்கு இவரது கூற்றுப் பொருந்தாமை நன்கு விளங்கும். இடைக்காலத்துத் தோன்றிய செந்தமிழ்க் காப்பியங் களுட் சிறந்ததாகிய சீவகசிந்தாமணியைத் திருத்தக்கதேவர் ஆக்கியபோது அஃது இரண்டாயிரத்து எழுநூறு செய்யுட் களேயுடைய தாயிருந்தது. ஆக்கியோனுக்குப்பின் அதற்கு நல்லுரை வகுத்த நச்சினார்க்கினியர் தங் காலத்தில் அது மூவாயிரத்து ஒருநூற்று நாற்பத்தைந்து செய்யுட் களுடை தாயிற்று.மிகுதியான தாயிற்று. மிகுதியான இந் நானூற்று நாற்பத்தைந்து செய்யுட் களும் டையே கந்தியாராற் செய்து சேர்க்கப்பட்டன வென்றும், அங்ஙனம் பின்னரெழுதிச் சேர்க்கப்பட்ட செய்யுட் கள் இவைதாமெனப் பிரித்தறியக்கூட வில்லையென்றும் உரைகாரர் நச்சினார்க் கினியரே வரைந்திருக்கின்றார். சீவகசிந்தாமணி தோன்றிய காலத்தும், அது மிக்கு வழங்கிய சேக்கிழார் காலத்துந் தமிழ்க் கல்வியிற் சிறந்த சான்றோர் இத் தென்னாடெங்கும் நிறைந்திருந்ததோடு, செந்தமிழைப் பெரிதும் ஓம்பிவளர்த்த தமிழ் வேந்தரும் மிக்கு விளங்கினார். அவ்வாறிருந்தும், ஆக்கியோனாற் செய்யப்படாத நானூற்று நாற்பத்தைந்து செய்யுட்கள் அவற்குப் பின் அந் நூலின்கண் வந்து கலந்துவிட்டன. நச்சினார்க்கினியர் அந்நூலுக் குரை யெழுதி வையாதொழியின், இன்னும் எத்தனையோ செய்யுட் கள் பின்னும் அதன்கட் சேர்ந்திருக்கும். இவற்றை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/293&oldid=1584054" இலிருந்து மீள்விக்கப்பட்டது