உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம் 16

வடமொழிப்புராணங்களெல்லாம் இவ்வியல்பினவேயா மென்றும் அவற்றை நன்காய்ந்தோர் தக்க சான்றுகளு L ன் எழுதி ருக்கின்றனர். கிரீக் மொழியில் ஓமர் இயற்றிய இலியட், ஒடிசி என்னும் இரண்டு காப்பியங்களும் பின் வந்தோர் பலராற் பண்டையளவினும் மிகப் பெருக்கி எழுதப்பட்டனவாகு மென்பதை அவற்றை யாராய்ந்த அறிஞர் தெளிவாக எடுத்துக்

காட்டியிருக்கின்றனர்.

லுள்

னி, ஆங்கில மொழியிற் செகப்பிரியர் (ஷேக்ஸ்பியர்) என்னும் நல்லிசைப் புலவர் பெயரால் எழுதிச் சேர்க்கப்பட்ட நாடகக் காப்பியங்களும் பல. கம்பர் தமிழில் இயற்றிய இராமாயணம் அவர் காலத்திலேயே பல மாறுதல்களை அடைந்ததெனவும், ஒருகால் அவர் இராமாயணம் கற்கும் ஒரு கூட்டத்திற் போயிருந்துஅதனைக் கேட்டுத், தம்மரு கி ளாரை நோக்கி ‘இஃது யாவர் பாடிய இராமாயணம்?' என்று வினவ, அவர்கள் ‘இது கம்பர் பாடியது' என்று விடைகூற, அதற்கவர் வியந்து ‘கம்பர் பாடிய பாட்டுக்களும் இதிற் சில உள' என்று சொல்லிப் போயின ரெனவும் ஒரு கதை வழங்கு கின்றது. இக் கதை பொய்யோ, மெய்யோ; எங்ஙனமாயினும் கம்பராமாயணம் பின்னுள்ளோராற் பெரிதுந் திரிபுபடுத்தப் பட்டதென்பது மட்டும் இதனாற் போதரும் உண்மையாம்.

இக் காலத்திற்போல அச்சுப் பொறிகளும், அவற்றிற் பதிப்பிடப்படும் ஆயிரக்கணக்கான புத்தங்கங்களும் அக்காலத் தில்லாமையால், கற்றார் முதற் கல்லார் ஈறாக எல்லாரும் விரும்பிக் கேட்குங் கதைகளும் வரலாறுகளும் நிறைந்த காப்பியங்களைக் கற்றுப் பிறர்க்கு எடுத்துச் சொல்வார், காலங்கடோறும் தமக்கு இனியனவாகத் தோன்றுவனவற்றை இடையிடையே எழுதிச் சேர்த்தலோடு, அவற்றில் தமக்கு இனிய வல்லவாகக் காணப்படுவன வற்றையும் மாறுபடுத்தி விடுதலும் வழக்கமாய் யாண்டும் நடைபெற்று வந்ததொன் றாம். உடை டையிடையே

ங்ஙனம்

செய்யப்பட்ட

டைச்

சருகல்களும், திரிபுகளும் ஏட்டுச் சுவடிகள் சிலவேயுள்ள அக் காலங்களில் எளிதிற் கண்டறியப்படுவனவல்ல. அதனோடு, எவற்றையும் ஆராயாமலே நம்பிவிடும் இயல்பும் அக் காலத்தவரிற் பெரும்பாலார் உடையர். அதனாற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/295&oldid=1584056" இலிருந்து மீள்விக்கப்பட்டது