உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

271

பின்னுள்ளோர் சேர்த்த இடைச் செருகல்களும், திரிபுகளும் நூலாசிரியன் செய்தன வாகவே பெரும் பாலுங் கொள்ளப் பட்டு வந்தன. இதனாலன்றே; உரையாசிரியர்கள் தாமுரை யெழுதும் நூல்களுக்குப் பல ஏட்டுச் சுவடிகள் வருந்தித் தேடி, அவற்றிற் காணப்படும் பாடவேறு பாடுகளையுந் தம்முரையுள் ஆங்காங்கு குறித்துப் போகின்றனர். திருச்சிற்றம்பலக் கோவை யாருரையிற் பேராசிரியர் பாடவேற்றுமைகள் பல காட்டுதலும், இங்ஙனமே ஏனைப் பல நூல்கட்கு உரை வகுத்தாரும் பாடவேற்றுமைகள் எடுத்துக் காட்டுதலும் எமது மேற் கோளை நிறுவுதற்குப் போதிய சான்றுகளாம். உண்மை இவ்வாறிருப்ப, இதனை ஒரு சிறிதும் ஆய்ந்துணராது, இடைச் சருகல்களும் திரிபுகளும் நிகழ்தற்கு அஞ்ஞான்று எங்கும் நிறைந்த கற்றறிவினர் எங்ஙனம் ஒருப்படுவர்? என்று வினாதல் நகையாடி விடுக்கற் பாலதாமென்க.

இனிச், சேக்கிழார் அடிகள் தாம் இயற்றிய அடியார் வரலாறுகளின் தொகுதிக்குத் ‘திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரே அமைத்தார் என்பது அவர் தாமே பாயிரத்திறுதியிற் கூறிய,

66

“இங்கிதன் நாமங் கூறின் இவ்வுல கத்து முன்னாள்

தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்கு கின்ற

செங்கதிர வன்போல்நீக்குந் திருத்தொண்டர் புராணம் என்பாம்

என்னுஞ் செய்யுளால் நன்கு புலப்படும். இங்ஙனம் ஆசிரியர் சேக்கிழார் வைத்தருளிய இப் பெயரையே அடியோடு மாற்றி அந் நூலுக்குப் ‘பெரிய புராணம்' என்னும் பெயரை வைத்து வழங்கிய பின்னோர், இடையிடையே தாம் வேண்டிய செய்யுட்களையும் எழுதி அந் நூலின்கட் சேர்த்துவிட்ட ரென்பது ஒரு வியப்பன்று. 'தொண்டர்' என்னுஞ் சொல்

ஆண்

П

அடியர்’ எனப் பொருடருதலால், அவ் வடியவர்க்கு ான் ஒருவன் தனி முதல்வனாய் உளன் என்பது சைவநூற் கொள்கை யாகும். மற்று மாயாவாதமோ ஆண்டவன் எனவும் அடியார் எனவும் இரண்டில்லை அதனால் அடிமைத்திறம் என்பதும் ஒன்றில்லை, இல்லை யாகவே தம்மைப் பிரமமாக உணர்ந்தாரைப் பெரியரெனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/296&oldid=1584057" இலிருந்து மீள்விக்கப்பட்டது