உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

6

மறைமலையம் 16

கூறல் வேண்டுமே யல்லாது அடியரெனக் கூறுதல் ஆகாதென்று கொள்வது. அத்தகைய மாயாவாதக் கொள்கை யுடையார் எவரோதாம், 'திருத்தொண்டர் புராணம்' என்னும் பெயரைப் ‘பெரிய புராணம்' எனக் கரவாய் மாற்றி, ஆசிரியர் சேக்கிழார் வைத்தருளிய அச் சிறந்த பெயர் பெரும் பாலார்க்குள் வழங்காதபடி செய்து விட்டனர். பிற்காலத்திற் சைவசித்தாந்த நுண்ணூலுணர்ச்சி குன்றி மாயாவாதப் பருநூலுணர்ச்சி பெருகச், சைவம் இது, மாயாவாதம் இது எனப் பகுத்துணர மாட்டாமற் சைவரிற் பெரும்பாலாரே மாயாவாதக் கொள்கையினராய் மாறுபட்டமையிற்றிருத் தொண்டர் புராணம் என்னும் பெயரை விடுத்துப், 'பெரிய புராணம் என்னும் பெயரையே பெரிதும் வழங்கலாயினர். சைவரும் அவர் செய்த அச் சூழ்ச்சியினை அறியாராய்த் தாமும் அப் பெயரையே பெரிதும் வழங்கி விட்டனர்.

6

இங்ஙனமே, மாயாவாதிகள் சைவ நூல்களுட் புகுந்து தமக்கிசைந்த பல மாறுதல்களைச் செய்து, அவற்றைச் சைவருங் கைக்கொள்ளுமாறு செய்த ஏமாற்றங்கள் எத்தனையோ பல உள. அவற்றுள் இன்னும் ஒன்றுகாட்டுவாம். இத் திருத் தொண்டர் புராணத்தை உரைநடையில் எழுதிய சைவர் சிலர், சுந்தர மூர்த்தி நாயனாரின் பண்டைவரலாறு கூறுகின்றுழித் திருக்கைலாயத்திற் சிவபெருமான் ஒரு கண்ணாடியை யெடுத்து நோக்க, அதிற்றோன்றிய தமது அழகிய திரு வுருவத்தைக்கண்டு வியந்து ‘சுந்தரமே வா' என்று அழைப்ப, னே அக் கண்ணாடியினின்றும் புறங்குதித்துவந்த அவ் வுருவமே ஆலால சுந்தரர்’ எனப் பெயர் பெற்றதென்று ஒருகதை எழுதி வைத்திருக்கின்றனர். ஆசிரியர் சேக்கிழார் பாடியதாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘திருமலைச் சருக்கத்’ திலுங் கூட இக்கதையைக் காணோம். திருத்தொண்டர் புராணத்தை உரை நடைப் படுத்தி எழுதுகின்றவர், அப் புராணத்திற் சால்லப்படாதவைகளையுந் தமக்குத் தோன்றியவா றெல்லாஞ் சேர்த்தெழுதுதல் முறையாகுமோ! இங்ஙனஞ் செய்யுளில் இல்லாமல் உரையில் வலிந்துபுகுத்தப் பட்டனவும் சைவர்களால் உண்மையென்று ஏற்றுக்கொள்ளப்படுதல் என்னையென்று உற்று நோக்குங்கால், அவர் அவர் தம்மிற் பெரும்பாலார்க்குப் பகுத்தறிவில்லா நம்பிக்கை மிகுதியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/297&oldid=1584058" இலிருந்து மீள்விக்கப்பட்டது