உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

273

உளதாதல் நன்கு புலனாகின்றதன்றோ? இனி, உரைநடையிற் புதிது சேர்க்கப்பட்ட இக்கதை மாயாவாதிகளாற் புதிது படைக்கப்பட்ட தென்பதை யாங்ஙனம் அறிந்தீரெனிற் கூறுதும்: முழு மதியம் ஒன்றே குடங்கடோறுமுள்ள நீரிற் பல மதியங்களாய்த் தோன்றுதல்போலப், பரப்பிரமம் ஒன்றே L மாயையிற் பிரதிபலித்து எண்ணிறந்த சீவர்களாய்த் தோன்றுகின்றதென்று மாயாவாதிகள் கூறுநிற்பர். அதனால் கருத்துப் பரப்பிரமத்தின் வேறாகச் சீவர்கள் இல்லையென்பதூஉம், பரப்பிரமம் ஒன்றே அங்ஙனம் அவர்போற் பலவாய்த் தோன்றுகின்ற தென்பதூஉமே யாம்.

அவர்

L

து.

சிவ

இனிச் சிவபெருமான் ஒரு கண்ணாடியை நோக்கி அதிற்றோன்றிய தமது சாயலையே சுந்தரராக வருவித்தா ரென்பதனாற், சிவபெருமானுஞ் சுந்தரரும் என இருவரில்லை ருவரே உண்மையில் உளர் என்னும் அவரதுகொள்கை அக்கதையின்கட் புகுத்தப்பட்டமை காண்க. மாயையிற் றோன்றும் பரப்பிரம பிரதிபலன நிலையிற் கண்ணாடியிற் றோன்றும் சிவபெருமானது பிரதிபலனம் வைக்கப்பட் பெருமானாகிய முழு முதற் கடவுளே ஆண்டானெனவும், அவனுக்குத் தாம் அடிமை யெனவுஞ் சுந்தரமூர்த்தி நாயனாரே "மீளாவடிமை யுமக்கேயாளாய்” என்றாற்போற் பலவிடங் களில் வெளிப்படையாய்க் கூறியிருக்கவும், அச் சைவசித்தாந்தக் கருத்தொடு முரணிச் சிவத்தினது பிரதிபலனமே சுந்தரரெனக் கூறிய மாயவாதவுரையுங் கற்றறிவுடைய சைவர் சிலரால் ஆராயாமல் எடுத்தாளப்பட்டதன்றோ? ஒருவரதுடம்பின்கண் உயிர் உளதாதல்போல, அவ்வுடம்பின் எதிரொளி வடிவாய்க் கண்ணாடியிற் றோன்றிய நிழலுக்கு உயிர்உளதாதலும், அது கண்ணாடியினின்றுங் குதித்துச் சுந்தரரெனப் பயர் பெற்றுவந்த தென்றலும் யாங்ஙனம் பொருந்தும்? இன்னோ ரன்ன பொருந்தாக் கோட்பாடுகள் மாயாவாத நூலுடை யார்க்கே பொருந்துமன்றி, உண்மைநெறிவழாமற் செல்லும் சைவசித்தாந்தத்திற்கு ஒரு சிறிதும் உடன்பாடாகா வென்க. ஆகையால், இவைபோன்ற மாயாவாதப் பொய்க் கதைகள் சைவநூல்களுட் காணப்படுதல் பற்றி அவை சைவ மெய்க் கதைகள் போலுமென நம்பிவிடாது, உண்மைச் சைவராவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/298&oldid=1584059" இலிருந்து மீள்விக்கப்பட்டது