உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் 16

எவற்றையும் ஆராய்ந்து கைக்கொண்டு செயற்பாலதா மென்க.

L

ஒழுகுதலே

னி, ஆசிரியர் சேக்கிழாரியற்றியருளிய திருத் தொண்டர் புராணத்தின்கட் பாயிரத்திற்கும் நூற்றொடக்க மாகிய தடுத்தாட் கொண்ட புராணத்திற்கும் இடையே காணப்படும் திருமலைச் சிறப்பு முதலாகிய நான்கும் சேக்கிழார் இயற்றியன ஆகா என்பதற்கு யாங்கூறிய ஏதுக் களை மறுப்பான் புகுந்தவர், அங்ஙனம் பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே நாட்டுச்சிறப்பு முதலியன கூறுதல் தொன்னூற்புலவர் வழக்கு என்கின்றார். ஒரு கதையினைத் தொடர்புபடுத்துக் கூறும் ஒரு காப்பியத்துட் கூறுதற் கெடுத்த கதையினைக் கூறத்தொடங்காமல், இயை பில்லாத நாட்டுச் சிறப்பு நகரச்சிறப்புகளை வாளாவிரித்துப் பாடும் வழக்கம் சமணப் புலவர் காலத்திற்றோன்றிக் கந்த புராணம் இராமாயணம் பாடிய கச்சியப்பர் கம்பர் கால முதற்கொண்டு மிகப் பெருகிய தொன்றாம். ஆசிரியர் சேக்கிழார் சமணர் காலத்திற்குப் பின்னும் கச்சியப்பர் கம்பர் காலத்திற்கு முன்னும் இருந்தவராகலின் அவர் பின்னை யோரைப் பின்பற்றினவர் ஆகார்; சமணர் பொய் கூறுநீரராகலின் அவரைப் பின்பற்றுதலுஞ் சேக்கிழார்க்குக் கருத்தன்று. சமணர்க்கு முற்பட்ட பழைய நூலாசிரியரைப் பின்பற்றுதலே அவர் தந் திருவுள்ளக்கிடையாம். பழைய நல்லிசைப் புலவர் காலத்து எழுந்த தமிழ்ப்பெருங் காப்பியங்களோ எடுத்த பொருளைவிட்டு நாட்டு வளம் நகரவளங்களைப் பாடிக் காண்டிருப்பன அல்ல. இவ் வுண்மைக்குச், செந்தமிழ் மொழியின் நந்தாமணி விளக்கங்களாய்த் திகழும் ஐந்து பெருங்காப்பியங்களுள் முந்துநிற்குஞ் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே உறுபெருஞ்சான்றம். இப் பழந்தமிழ்க் ப் காப்பியங்களிரண்டுந் தாங் கூறுதற்கெடுத்த கதையை இடையீடு படாமல் உடனே கூறக் காண்டுமன்றிப், பின்றைக் காலத்துச் சமணநூல்களும் புராண நூல்களும் அவ்வவ் வூர்களிற் காணப்படாத நாட்டு வளங்களையும் அவ்வந் நகரங்களிற் காணப்படாத நகர வளங்களையும் பொய்யாகப் புனைந்து கட்டிப் பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே வாளாவிரித்துக் கூறுமாறுபோல் ஒரு சிறிதாயினுங் கூறக் காண்கின்றிலேம். இச் செந்தமிழ்ப் பழங்காப்பியங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/299&oldid=1584060" இலிருந்து மீள்விக்கப்பட்டது