உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

275

போலவே, உண்மையாய் நடந்த கதையை உள்ளவாறெடுத்துச் சொல்லும் உண்மைநெறி மேற்கொண்ட ஆசிரியர் சேக்கிழார், தமது நூலுக்கு ஓரியைபுமில்லாத நாட்டுவள நகரவளங்களைப் பாயிரத்திற்கும் நூலிற்கும் இடையே பாடிவைத்தாரென்றல் சிறிதும் பொருந்தாது.

அற்றன்று, சேக்கிழார்க்கு முற்பட்ட காலத்தே வழங்கிய சூளாமணி, சிந்தாமணி என்னுந் தமிழ்க் காப்பியங்கள் சமண முனிவரால் இயற்றப்பட்டனவாயினும் அவற்றிற்கனிந்து விளங்குந் தமிழ்ச்சுவையே பற்றித் தமிழ்ப்புலவரெல்லாரும் அவற்றை மீக்கூறக் காண்டலின் அவற்றின்கட் கூறப்பட்டவாறே சேக்கிழார் தாமும் நாட்டுச்சிறப்பு நகரச் சிறப்பு முதலாயினவற்றைப் பாடி வைத்தாரெனின்; நன்று சொன்னீர், சூளாமணி, சிந்தாமணி யென்னும் அமண்காப்பியங்கள் இல்லோன்’ றலைவனாக இல்லது புனைந்து கூறும் பொய்க்கதை தழீஇய நாடக வழக்குப்பற்றி வந்தனவாகும்; அநபாய வேந்தன் அவைக்களத்தே இவ் வமண் காப்பியப் பொய்யும் புரட்டும் விரும்பிக் கற்கப்படுதல்கண்டு இரங்கி சேக்கிழார் அவற்றின் பயிற்சி பயன்படாமை அரசற்குத் தேற்றி, உலகிற்கு உண்மை உண்மை யறிவுச்சுடர் கொளுவுவான் கருதி

உள்ளோன் றலைவானக உள்ளது தெளித்துக்கூறும்’ மெய்ந் நாடக வழக்குப்பற்றி மெய்யடியார் மெய்வரலாறுகளை ஒருங்கு தொகுத்துத் ‘திருத்தொண்டர் புராணம்' என்னும் அரும்பெருஞ் செந்தமிழ் மெய்க்காப்பியம் இயற்றி யருளினார். சாற்சுவை பொருட்சுவையோடு பொருளுண்மையும் உண்மையன்பின் விழுப்பமுந் தேற்றுவான் புகுந்த ஆசிரியர் சேக்கிழார்க்கு அவ்வியல்புகள் முற்றமுடைய சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பழைய மெய்க்காப்பியங்களைப் பின்பற்றிச் செல்லுதலே திருவுளப் பாங்காமல்லது, உண்மை யல்லாக் கதைமேற் சொற்சுவையுங் காமவின்பச் சுவையும் மட்டுமே முதிரச் சொல்லுஞ் சூளாமணி சிந்தாமணி என்னும் அமண்புரட்டுக் காப்பியங்களைப் பின்பற்றல் கருத்தாகாது. இவ்வுண்மை,

“கலகமிடும் அமண்முரட்டுக் கையர் பொய்யே கட்டி நடத் தியசிந்தாமணியை மெய்யென், றுலகிலுள்ளோர் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/300&oldid=1584061" இலிருந்து மீள்விக்கப்பட்டது