உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் 16

கற்றுநெற்குற் றுண்ணா துமிக்குற்றிக் கைவருத்திக் கறவைநிற்க, மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ் சோலை வழியிருக்கக் குழியில்விழுந் தளறுபாய்ந்து, விலைதருமென் கரும்பிருக்க இரும்பை மென்று விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்து நொத்தார்” எனவும்,

66

வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச் சிந்தா மணிக் கதையை மெய்யென்று வரிசை கூற, உளமகிழ்ந்து பலபடப் பாராட்டிக் கேட்க உபயகுல மணி விளக் காஞ் சேக்கிழார் கண் டிளவரசன் றனைநோக்கிச் சமணர் பொய்ந் நூல் இதுமறுமைக் காகாதிம் மைக்கு மற்றே, வள மருவுகின்ற சிவ கதையிம்மைக்கும் மறுமைக்கும் உறுதியென வளவன்கேட்டு” எனவும் உமாபதி சிவனார் அருளிச் செய்யுமாற்றாற் காண்க.

அற்றன்று, கதையளவில் அவ்வமண் காப்பியங்களைச் சேக்கிழார் பின் பற்றாராயினும், தமிழ்ச்சுவையளவில் அவர் அவற்றைப் பின்பற்றினாரென்றல் குற்றமன்றலெனின்; தமிழ்ச் சுவையளவிலும் ஏனைப்பல நலங்களினும் இவ் வமண்காப்பியங் களைவிட எத்தனையோ மடங்கு மிக்குயர்ந்து துலங்கும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பழந்தமிழ்க் காப்பியங் கள் இருப்ப அவற்றை விடுத்துத் தெய்வச் சேக்கிழார் ஏனைய வற்றைப் பின்பற்றினாரென்றல் ஒருவாற்றானும் ஏலாது. நடு நின்று நுணுகி நோக்குவார்க்குச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் சொற்சுவை பொருட்சுவைகளிற் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருச்சிற்றம்பலக் கோவையாரை ஒப்பதன்றி, ஏனைப் பின்றைக்காலத்துக் காப்பியங்களை ஒவ்வாமை நன்கு விளங்கும். பின்றைக்காலத்துக் காப்பியங் களுள் ‘திருத்தொண்டர் புராணத்’திற்கு இழிந்தனவேயுள வல்லது, அதற்கு ஒப்பாவதும் மிக்கதும் ஏதுமில்லையெனும் மெய்ம்மையும் நடுநிலையாளர் கடைப்பிடித்துணர்வர். எனவே, பழந்தமிழ்க் காப்பியங்களோ டொவ்வாமல்,

அமண் காப்பியங்களோடொத்துக் காணப்படும் நாட்டுச் சிறப்பு முதலியன சேக்கிழாராற் செய்யப் படாமல் அவர்க்குப் பிற்பட்டாராற் செய்து சேர்க்கப்பட்டனவா மென்பதே தேற்றமாமென்க.

இனிப், பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே நூலோடு இயைபில்லாத நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்புக்களை விரித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/301&oldid=1584062" இலிருந்து மீள்விக்கப்பட்டது