உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

கருத்தோவியம்

277

பாடுதல் பழைய புலவர்க்கு வழக்கமேயாம் என்னுந் தமது கொள்கையை நிறுவுதற்கு எதிர்ப்பக்கத்தார் கூறுவது இது. தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் தாம் கூறுதற்கு எடுத்துக்கொண்ட அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப் பால் என்னும் மூன்றற்கும் முதலிலே ‘கடவுள் வாழ்த்தும்’, 'வான் சிறப்பும்' ஆகிய பாயிரங் கூறுதலோடு, அவற்றிற்கும் நூலுக்கும் டை யிலே 'நீத்தார் பெருமை' அறன் வலியுறுத்தல்' என்னும் வேறு இரண்டனையும் வைத்துக் கூறினாற்போலச் சேக்கிழாரும் அங்ஙனம் நாட்டுச் சிறப்பு முதலியவற்றை இடைக்கண் வைத்து ஓதினார் என்பது. வ்வாறு உரைக்குமாற்றால், திருவள்ளுவனார் இயைபில் லாதனவற்றை

கருத்தாகின்றது.

டை விரித்தோதினாரென்பதே இவரது

ஆசிரியர் திருவள்ளுவர் கருத்தறியாது கூறினமையின் இவருரை பொருந்தாதென்பது காட்டுவாம். 'கடவுள் வாழ்த்து’ முதலாகிய நான்கு இயல்களுமே நூற்பொருளைச் சிறப்பித் தற்கு வந்த சிறப்புப்பாயிரமாமென்று அறிதல் வேண்டும். யாங்ஙன மெனின், நூலோதுதலின் பயன் கடவுளை யுணர்ந்து அவன்றிருவடிகளைத் தொழுது பிறவித் துன்பத்தை அறுத்த லேயாகவின் தாம் இயற்றும் அந் நூலின் பெரும் பயனை உணர்த்தும் பாயிரமாகக் ‘கடவுள் வாழ்த்தினை’ முதற் கண் வைத்தார். இனித்தாம் அறிவுறுத்துதற்கு எடுத்துக் கொண்ட அறத்தை இல்லறம் எனவுந் துறவறம் எனவும் இரண்டாகப் பகுக்கின்றராகலின், இல்லறம் நடைபெறுதற்கு இன்றிமையாக் கருவியாகிய மழையினது சிறப்பும், துறவறம் நிலைத்தற்கு இன்றிமையாத் தன்மையரான நீத்தாரது சிறப்பும் அதன்பின் முறையே வைத்தார். இனித் தாம் உணர்த்தும் அறம்பொருள் இன்பம் என்னும் முப்பாற்பொருளும் அறத்தையே நிலைக் களனாக் கொண்டு நடப்பனவாமென்று வலியுறுத்துவார் அறத்தின் பொதுவாகிய சிறப்பை அவற்றின் பின், ‘அறன் வலியுறுத்தல்' என வைத்தார்.

இவ்வியல் முப்பாற்கும் பொதுவாகிய அறத்தின் சிறப்பையே உணர்த்துவதென்பது எற்றாற் பெறுதுமெனின்; 'மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்' என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/302&oldid=1584063" இலிருந்து மீள்விக்கப்பட்டது