உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

❖ LDMMLDMOLD -16 →

ம்

வியலுட்போந்த செய்யுள் உள்ளத்தின்கண் மாசு தீர்ந்து தூயனாகப் பெறுதலே அறத்தினியல், என முப்பாற்கும் பொதுவாகிய அறத்திணைக் கூறுதலானும் “சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும்” என்னுஞ் செய்யுள் இல்லறவியல் துறவற வியல் களையும், “அறத்தாறு இதுவென வேண்டா" என்னுஞ் செய்யுளும், “ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே என்னுஞ் செய்யுளும் பொருட்பாலையும், “அறத்தான் வருவதே இன்பம்" என்னுஞ் செய்யுள் இன்பத்துப் பாலையும் நோக்கி நிற்றலானும் பெறுதுமென்பது. எனவே, நூலுட் கூறும் முப்பாற் பொருட்கும் இன்றியமையாச் சிறப்பினவாய நான்கு பொருள்களைக் கூறும் இந் நான்கியல்களும் ஒன்றற்கொன்று இயைபுடையவாய் யைபுடையவாய் ஒரு தொகைப்பட்டு நூற் சிறப்புப்பாயிரமாய் அமைந்து நிற்கின்றனவே யல்லாமல் நூற்கு இயைபில்லாத இடைப் பிறவரலாய் நிற்கவில்லை யென்று ஓர்ந்து உணர்க. ஆகவே, இஃது உணராதுரைத்தார் கூற்றுப், பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே பிறபொருள் வரலாமெனக் கொள்னுந் தமது கொள்கையை நிலை நிறுத்தாதென் றொழிக.

டையே

இனிச், சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர்தம் திருத்தேவி யாரான பரவையார் சங்கிலியாரும் இந் நிலவுலகில் வந்து பிறந்தருளுதற்கு ஏதுவாய் நின்ற முற்பிறவியின் வரலாறுகளை ஆசிரியர் சேக்கிழார் நூலுட் கூறாமையின், அவற்றை வேறு தனியேசெய்து பாயிரத்திற்கும் நூலுக்கும் திருமலைச் சருக்கம்' என வைத்துக் கூறினாராகலின் அது நூற்பொருளோடு யைபுடையதாய்ச் சேக்கிழாரால் ஆக்கப்பட்டதேயாய் முடியும் என்னும் எதிர்ப் பக்கத்தார் கூற்றை ஆராய்வாம். ஒரு பிறவியில் வந்த ஒருவருடைய வரலாறுகளைப் பிழைபடாமல் ஆராய்ந்து எழுதுவதே பெருவருத்தமா யிருக்கின்றது; அங்ஙனமிருக்க அவர் அதற்கு முற்பட்ட பிறவிகளில் இருந்த வரலாறுகளைத் தெரிந் தெழுதுதல் யாங்ஙனங் கூடும்? இப்போதிருக்கும் ஒருவர் மேற்பிறவியில் இவ்விவ்வாறு இருந்தார் என்பதைத் தெரிதற்கு வழி யாது? ஒருவர் பிறக்கும்போது அவர் எங்கிருந்து வருகின்றாரென்பது அவர்க்குந் தெரியாது, அவரை ஈனுந் தாய் தந்தையார்க்குந் தெரியாது அவரைச் சூழ்ந்தார்க்கும் தெரியாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/303&oldid=1584064" இலிருந்து மீள்விக்கப்பட்டது