உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

279

பிறர் எவருக்குமே தெரியாது அங்ஙனமே அவர் இறக்கும் போதும் அவர் செல்லுமிடம் இதுவென எவருமே அறியார்.

ஒரு பிறவிக்கும் மற்றொரு பிறவிக்கும் இடையிலே எவரானும் ஏறிச் செல்ல யலாத அறியாமைச் சுவர் த அத்துணை உயரமாக எழுப்பப்பட்டிருக்கின்றது. எல்லாம்வல்ல இறைவன் ஒருவனுக்கே யல்லாமல் மற்றையோர் எவர்க்கும் உயிர்கள் எடுக்கும் பல பிறவிகளின் வரலாறுகளும் அவற்றின் தொடர்புகளும் உணரலாகா. அற்றன்று, மலமாசு தீர்ந்து இறைவனது திருவருளைச் சார்ந்து நிற்பார்க்கு எல்லாந் தாமே விளங்குமாலெனின்; நன்று கூறினாய், இறைவனருளைச் சார்ந்தார் அவ்வருளையே நோக்கி அவ்வருளின்பத்திற் படிந் திருப்பரல்லது, ஏனையவற்றை ஒரு சிறிதும் நோக்கார். அது மலமாசு முற்றுந் தீர்ந்தார்க்கு ஒக்குமாயினும், உடம்போடு கூடி யிருந்தே தூய அருள்வழியராய் நிற்பார்க்கு ஒருவரின் பல பிறவி வரலாறுகளை யறிதல் கூடுமெனின்; அவரும்

அருள்வழியராய் நிற்றலால் அருளால் உந்தப்பட்டு ஒரோ வொரு கால் ஒரு பெரும்பயன் கருதி ஒருவரின் பழம் பிறவி வரலாறுகளை உணர்வாரல்லது, எஞ்ஞான்றுமே அவர் தாமாகவே அவற்றை உணரப்பெறார். அற்றன்று, அவர் அவற்றைத் தாமாகவே அறிதல் கூடுமெனிற்;சிற்றம்பலத்திலே செல்லுக்கு இரையாய்ப்போன தேவாரப் பதிகங்களை அவை முன்னிருந்த படியே கண்டறிந்து எழுதிவைப்பார் எவரும் இல்லாமையின் அது பொருந்தாதென்க.

மேலும், பெரிய புராணத்தின்கட் கூறப்பட்ட நாயன் மார்களுள் மரபு இன்னதென்று அறியப்படாமற் சொல்லப் பட்டோர் பதின்மூவரும், ஊர் இன்னதென்பது தெரியாமற் சொல்லப்பட்டோர், எழுவரும், பேர் இன்னதென்று உணரப் படாமற் புகலப்பட்டோர் எண்மரும் உளராகலானும், இன்னும் அங்ஙனமே அவ்வவர் வரலாறுகளில் தெரியாமல் விடப்பட்டனவும் பலப்பல உளவாகலானும் அருள்வழி நிற்பார்க்கும் அது காட்டும் அத் துணையின் மேற்பட்டுப் பழம்பிறவியின் வரலாறுகளை யுணர்தல் செல்லாதென்க. ஒரு பிறவியில் நிகழ்ந்த ஒருவரின் வரலாறுகளை இறைவனாற் றரப்பட்ட பகுத்தறிவு கொண்டு பிழைபடாமல் ஆராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/304&oldid=1584065" இலிருந்து மீள்விக்கப்பட்டது