உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் 16

தரிந்தவளவு எழுதுதலே அறிவான்மிக்க சான்றோர்க்கு இயல்வதாமென்க. ஆசிரியர் சேக்கிழார் தமக்குள்ள பகுத்தறிவு முதிர்ச்சிகொண்டு, அவ்வந்நாயன்மார் வரலாறுகளைப் பல அடையாளங்களி னுதவியால் ஆராய்ந்து, உண்மை தெரிந்த மட்டில் நன்கெழுதி வைத்தனரே யல்லாமற், சான்றுகள் இல்லாத வரலாறுகளையும், நாயன்மார்கள் பழம்பிறவிகளில் இருந்த வரலாறுகளையும் ஆசிரியர் சேக்கிழார் ஒருசிறிதுங் கூறப்புகுந்தார் அல்லர். திருஞானசம்பந்தர், திருநாவுக் கரையர், கண்ணப்பர், சிறுத்தொண்டர் முதலான எந்த நாயன்மாரின் பழம்பிறப்பு வரலாறுகளையும் எடுத்தோதாத சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனாரின் பழைய பிறவி வரலாற்றை மட்டும் எடுத்து ஓதினாரென்றல் தினைத் துணையும் பொருந்தாத உரையாம்.

அல்லதூஉம், சுந்தரமூர்த்தி நாயனாரின் பழம்பிறவி

நிகழ்ச்சி திருக்கைலாயத்தின் கண்ணே நிகழ்ந்ததொன்றெனக்

குறிக்கப் பட்டிருக்கின்றது. திருக்கைலாயமோ இந்

நிலவுலகத்தில் யாண்டும் உள்ளதன்று. மக்களாய்ப் பிறந்த

நாமோ பிரகிருதிமாயையின் இருபத்து நான்காவது

கீழ்ப்படியாயுள்ள மண்ணுலகுகள் பலவற்றுள் ஒன்றில் இருக்கின்றோம். நமக்குமேல் இருபத்து மூன்றாம் படியிற் பிரகிருதிமாயை உளது. அப்பிரகிருதிமாயைக்கு மேல் அராக தத்துவம் உளது; அவ்வராக தத்துவத்திலே சீகண்ட உருத்திரர் எழுந்தருயிருக்கும் திருக்கைலாயம் உளதென்று சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன. அராகதத்துவ மண்டிலங்கள் நமக்கு எவ்வளவு தொலைவில் இருக்கின்றனவோ, அவற்றின் உண்மையை இப்போதுள்ள வான் நூல்கள் கொண்டும் ஒருவாற்றானுந் துணியக்கூட வில்லை. 6 எத்தகைய தொலைவு நோக்கிக் கண்ணாடியின் உதவிகொண்டு நோக்கினும், அவை நம் கட்புலன்களுக்குத் தோன்றாமையின், அவற்றின் இயல்பு நம்மால் அறியக்கூலுடவில்லை. இனித்,தொலைவு நோக்கியின் உதவிகொண்டு நாம் கட்புலன்களாற் கண்டறிந்து கொள்ளத் தக்க எல்லையிலுள்ள செவ்வாய், திங்கள், ஞாயிறு முதலான மண்டிலங்களின் இயல்பும் நிகழ்ச்சியுமாவது நம்மால் விரிவாக அறியப்பட்டிருக்கின்றனவா வென்றால், அதுவும் இல்லை, இல்லை இவற்றுக்கே இங்ஙனமென்றால் நம் கண்ணுக்கும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/305&oldid=1584066" இலிருந்து மீள்விக்கப்பட்டது