உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி

கருத்தோவியம்

281

மனத்துக்கும் எட்டாத அராகதத்துவ மண்டிலத்துள்ள க்கைலாயத்தில் நிகழ்ந்தவற்றை இந்நிலவுகத்துள்ளார் உணர்ந்துகொள்வது யாங்ஙனம்?

இந் நிலவுலகத் திருந்த ஒருவரின் வரலாறுகளை முற்றும் அறிந்துரைத்தல் இயலாததாயிருக்கையில், இங்குள்ளார் எவ்வாற்றானுந் தெரிந்துகொள்ளுதற்கு ஏலாத அத்துணைச் சேய்மையிலுள்ள அராகதத்துவ திருக்கைலாய நிகழ்ச்சிகளை ஈண்டையார் கண்டுரைப்பரென்றல் யாங்ஙனம் பொருந்தும்? ஆதலால் தாம் கூறும் உண்மை வரலாறுகளில் எவர்க்கேனும் ஐயப்பாடு உண்டானால் அவர் அவற்றைத் தாமாகவே ஆராய்ந்து உண்மை காணத்தக்க வகையாக, மெய்ச்சான்றுகள் கொண்டு நாயன்மார் வரலாறுகளை வரைந்த ஆசிரியர் சேக்கிழார் அங்ஙனம் ஐயந்தெளிதற்கு ஆகாத கைலாய நிகழ்ச்சிகளை உரைத்தாரென்றல் எள்ளளவும் இசையாது. இதனை ஓரெடுத்துக்காட்டான் விளக்குவாம்.

சிறுத்தொண்டர் தம் மன்னவன் பொருட்டு வடக்கே யுள்ள வாதாவி நகரத்தின்மேற் படையெடுத்துச் சென்று அந் நகரத்து அரசனை வென்று திரும்பினாரெனக் கூறும் சேக்கிழார் உரையில் எவரேனும் ஐயம் உற்று அதன் உண்மையை ஆராயப்புகுந்தால்,அவ் வாதாவி நகரத்திலுள்ள பழைய கல்வெட்டு ஒன்று சான்றாக நின்று அதன் உண்மையை அவர்க்கு ஐயம் அற நாட்டும். இங்ஙனமே, சேக்கிழார் கூறிய வரலாறுகளை உண்மையெனத் தெளிதற்கு மெய்ச்சான்றுகள் ஆங்காங்கு உள்ளன. இதுபோலவே, திருக்கைலாயத்தில் ஒன்று நடந்ததென ஒருவர் கூறினால் அதனை உண்மையெனத் துணிதற்கு ஒரு மெய்ச்சான்று இல்லையாகலின், அவ்வியல்பின தொன்றை ஆசிரியர் சேக்கிழார் கூறினார் என்றல், அவர் கூறும் வரலாற்று முறைக்குச் சிறிதும் இணங்காதென்க.

அற்றன்று, ஒரு வரலாற்றின் உண்மையைத் தெரிதற் பொருட்டு அதற்குரிய சான்றுகளை ஒருவர் தேடிமுயன்று அறிதல்போல, மேலே எட்டாச் சேய்மைக்கண் உள்ள திருக்கைலாய நிகழ்ச்சியினைத் தெரியவேண்டுவாரும் தவங்கிடந்து தமதுயிரைத் தூய்தாக்கி அதனை அருள்வழி நிறுத்த வல்லுநராயின், அவர் அம்மேலுலக நிகழ்ச்சியினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/306&oldid=1584067" இலிருந்து மீள்விக்கப்பட்டது