உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

❖ மறைமலையம் -16

ஐயமின்றித் தெளிந்துகொள்வரெனின் அங்ஙனந் தவத்தால் தூயராய் அருள்வழி நிற்பார், பிறர் எவருங் கூற வேண்டாமலே நாயன்மார் வரலாறுகளையெல்லாம் முற்ற உணர்வராகலின், அன்னவர்க்குப் பெரியபுராண முதலான நூல்களின் வாயிலாக அறியவேண்டுவதொன்று மில்லையென மறுக்க. மேலும், இவ்வுலக நிகழ்ச்சியிற் காணப்படாத பொய்யும் புரட்டுமாகிய கதைகளைக் கட்டிவைப்பாரை நோக்கி, இவற்றுக் கெல்லாம் சான்றுகள் எங்கே உள்ளனவென்று ஓர் அறிவுடையார் கேட்டால், “இவையெல்லாம் நுமதறிவுக்கு விளங்கா; நீர் மனந் தூயராய்த் திருவருள்வழி நிற்கும்போதுதான் இவை முற்றும் உமக்கு விளங்கும்” என்று அப் பொய்க்கதைப் புரட்டர்கள் விடைசொல்லி ஏமாற்றுவராகலின், சான்றுகள் காட்டாமல் ங்ஙனம் கூறும் மறுமொழிகள் அறிவுடையோரால் ஏற்றுக்கொள்ளற்பாலன அல்லவென்க. எனவே, திருக்கைலாய நிகழ்ச்சி ஈண்டுள்ளாரால் அறிந்துகொள்ளுதற்கு ஆகாமை யானும், ஏனை நாயன்மாரின் முற்பிறவி வரலாறுகள் பெரிய புராணத்தின்கண் யாண்டும் சொல்லப் படாமையானும் திருக்கைலாயத்தின்கண் நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறுகள் ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டன அல்லவென்பது தேற்றமாம். அது நிற்க.

இனிக், கைலாயத்தின் நிகழ்ச்தனவாகச் சொல்லப்பட்ட அவ் வரலாற்றின் பெற்றியை ஒரு சிறிது ஆராய்வாம். சிவபிரானை வழிபடுதற்பொருட்டு ஆலால சுந்தரர் என்பார் திருக்கைலாயத்தின் கண்ணதாகிய ஒரு பூங்காவில் மலர்கொய்வான் வேண்டி அதனுட் செல்ல, அங்ஙனமே பிராட்டியார் வழிபாட்டின் பொருட்டு ஆண்டு மலர்கொய்யப் போந்திருந்த கமலினி, அநிநதிதை என்னுந் தேவமாதரார் இருவரையும் அவர் எதிர்ப்பட்டனர் என்றும், அவ்வாறு எதிர்ப்பட்ட அளவானே ஆலாலசுந்தரர் அம் மாதரார் மேலும், அம் மாதரார் அல்வாலால சுந்தரர் மேலும் பெருங்காதல் கொள்வாராயினர் என்றும், அவ்விருதிறத்தார் உள்ள நிகழ்ச்சியையும் உணர்ந்த இறைவன் ‘இவ்விடம் நீர் இன்பந் துய்த்தற்கு உரியதன்று ஆகலான், நீவிர் மண்ணுலகத்துச் சென்று பிறந்து அதனைத் துய்த்து மீளக் கடவீர்களாக! என்று கூறி அவரை விடுத்தனன் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/307&oldid=1584068" இலிருந்து மீள்விக்கப்பட்டது