உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

283

அக்கதை நுவல்கின்றது.மிக வியக்கத்தக்க அமைப்போடு கூடிய ஆண் உடம்பு பெண் உடம்புகளை வகுத்து அவற்றின்கண் உயிர்களைப் புகுத்தி, அவை ஒன்றோடொன்று மருவி இன்பந் துய்க்குமாறு அவை தம்மை நாடத்தி வருபவன் எல்லாம் வல்ல இறைவனே யல்லாமல் வேறெவரும் அல்லர். இறைவன் வகுத்த வ்வமைப்புகளிலிருந்து பலதிற இன்பங்களையும் நுகர்ந்து கொண்டே, அவற்றை நுகராதார் போலவும், அவற்றை வெறுத்தார் போலவும் ஆண் பெண் பிறவிகளையும், அவற்றின் சேர்க்கையையும் வெளியே இகழ்ந்து பேசுபவர் கடவுளை நம்பாத பௌத்தரும், நானே கடவுள் என்னும் மாயா வாதிகளுமே ஆவர்.

கடவுள் வகுத்த இப் பிறவி யமைப்புகளையும், இவற்றை வகுத்த அவ்வாண்டவனது அருள் நோக்கத்தையும் உள்ளவாறு உணர்ந்து காணும் சைவசமயத்தவர் அவ்வாறவற்றை இகழ்தற் குரியார் அல்லர். திருக்கைலாயத்தேயுள்ள தேவர் குழாத்துள் ஆண் பெண் வகுப்புகள் உளவாயின், அவ்விரு திறத்தாரும் உயர்ந்த காதலன்பாற் பிணிப்புண்டு ஒருவரை யொருவர் மருவி இன்புற்றிருத்தற்கே அங்ஙனம் அவ் வகுப்புகளை இறைவன் தாற்றுவித்திருத்தல் வேண்டும். அவ்விடத்தில் ஆணும் பெண்ணும் மருவி இன்புறுதல் குற்றமெனக் கண்டானாயின், இறைவன் அவ் வகுப்புகளை ஆண்டுத் தோற்றுவியானதல் வேண்டும்; ஆணும் பெண்ணும் மருவுதற்கேற்ற அமைப்புகளை ஆண்டு ஒரு பயனுமின்றித் தோற்று வித்தது எதன்பொருட்டு என்றெழும் வினாவுக்கும் விடையின்றாம்; இனி, அவ்வாறவர் ஒருவரையொருவர் மருவி இன்புறுதலிற் போதருங் குற்றந்தான் யாது உளது? இறைவன் இன்ப வுருவினன் ஆகலானும், அவ்வின்பத்தை ஆண் பெண் சேர்க்கையானன்றி வேறு ஒருவாற்றானும் உயிர்கள்பால் தோற்றுவித்தல் ஆகாமையானும், அது பற்றியே எல்லா உயிரும் ஆண் பெண் சேர்க்கையைப் பெரிது விழைதலானும், இத்தகைய இன்ப நுகர்ச்சியிற் குற்ற மாகக் கருதத்தக்கது யாது உளது? இன்பத்தையே குற்றமாகத் தள்ளி வெறுத்தாற், பின் அதனினுஞ் சிறந்ததாகக் கருதி அடையற் பாலது யாது? அங்ஙனம் அடையப் படுவதூஉம் இன்பத்தைத் தருவதோ, துன்பத்தைத் தருவதோ? என்றெழும் வினாக்கட்கெல்லாம் வழிவிடுமாறு யாங்ஙனம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/308&oldid=1584069" இலிருந்து மீள்விக்கப்பட்டது