உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

❖ LDMMLDMOLD -16 →

அற்றன்று, மகளிர்பால் துய்க்கும் இன்பம் சிற்றின்பமே யாதலின் அதனை யொழித்து இறைவன்பால் துய்க்கும் பேரின்பமே வேண்டற்பாலதாமெனின்; ஒழிக்கற்பாலதாகிய மகளிரின்பத்தை இறைவன் அவர் வழியே வைத்து அமைத்து விட்ட தென்னை? இறைவனிடத்துத் துய்க்கும் பேரின்பம் அவ் விறைவனைத் தலைக் கூடி அவனோடு இரண்டறக்கலந்து நின்றாலல்லது வாய்க்குமோ? இறைவன் இயல்பை உள்ளவாறு ணர்தலும், அவனோடு பிரிவறக் கூடிநிற்றலும் முற்றப் பெறாதார்க்கு அப்பேரின்பத்தின் இயல்புதான் யாங்ஙனம் அறியப்படும்? என்று இங்ஙனம் எல்லாம் வைத்து நுணுகி யாராயும் வழி, மாசு முழுதுந் தீர்ந்து இறைவனோடு ஒன்றி வழி,மாசு ரண்டறக் கலக்கும் பேரின்பநிலை வாய்க்கும் வரையில், உயிர்கட்கு இறைவன் பல்வகை யுலங்களையும், அவ் வுலகங்கட்கு ஏற்ற இனிய பல்வகை நுகர்பொருள்களையும், மேன்மேல் உயர்ந்த ஆண் பெண் உடம்புகளையுந் தந்து அவர்களை மேன்மேல் இன்பத்தில் உயர்த்துக்கொண்டு போவன் என்னும் உண்மை நன்கு. விளங்கா நிற்கும். சீகண்டருத்திரர் எழுந்தருளும் அராக தத்துவ வுலகத்தும், அவர்க்கு மேற்பட்ட மகேசர் சதாசிவர் உலகங்களிலும் மேன்மேல் தூயவான உயிர்கள் மேன்மேலுயர்ந்த தூய ஆண் பெண் உடம்புகள் உடையராய்க் கூடி இன்பந் துய்ப்பரெனப் பௌட்காரகமும் இவ்வுண்மையை நன்கெடுத்துக் கூறுதல் காண். கடவுள் வகுத்த அமைப்பின் உண்மை இவ்வாறாகலின், அராக தத்துவுலகத்தின் கண்ணதான திருக்கைலாயத்தில் ஆலால சுந்தரரும் அம் மாதரார் இருவரும் ஒருவர் மேலொருவர் பெருங்காதல் கொண்டமை குற்றமாதலும், அக் குற்றத்தின் பொருட்டாகவே அவர் மண் மேற் பிறந்தாராதலும்

உண்மையல்லவாம் என்க.

அற்றேல், மாதராற்பாற் பெறுங் காதலின்பம் இறைவனை மறப்பித்து ஒருவனைப் பல தீவினைகளில் வீழ்த்தக் காண்டலின், அதனை உயர்த்துக் கூறுதல் ஆகா தெனின். அறியாது கூறினாய், இறைவன் வகுத்த அவ் வின்ப வழியின் இயல்பை உணர்ந்து, அக் காதலின்பத்தைத் துய்க்குமிடத் தெல்லாம் இறைவனை மேன்மேல் நினைந் துருகி, நினைந்துருகி, காதலின்பத்தைத் தமக்கு ஊட்டும்

அக்

றைவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/309&oldid=1584070" இலிருந்து மீள்விக்கப்பட்டது